கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நீண்ட இழுபறிக்கு பின் அதிமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக 4 தொகுதியில் போட்டியிட்டு தேர்தலை சந்தித்தது.இந்த கூட்டணி தமிழகத்தில் அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால்,நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக- தேமுதிக கூட்டணிக்கு இடையே தொடர்ந்து விரிசல் ஏற்பட்டு கூட்டணி தொடருமா? என்ற நிலை உருவாகியுள்ளது.
தமிழகத்தில் காலியான 6 ராஜ்யசபா சீட் பதவிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரம் மாதம் நடைப்பெற்றது.இதில் அதிமுக சார்பில் 3 நபரும்,திமுக சார்பில் 3 நபரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.தேர்தலுக்கு முன்பாக தேமுதிக ஒரு ராஜ்யசபா சீட்டை தங்கள் கட்சிக்கு ஒதுக்குமாறு எடப்பாடி பழனிசாமியிடம் தொடர்ந்து வலியுறுத்தியது.
ஆனால்,இதை மறுத்த அதிமுக தேமுதிக கட்சிக்கு எதுவும் ஒதுக்கவில்லை, இதுவே அதிமுக- தேமுதிக கூட்டணிக்கு இடையே விரிசல் ஏற்பட முதல் காரணமாக இருந்தது.மேலும், அதிமுக பாமகவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தேமுதிக விற்கு கொடுப்பதில்லை என்ற புகாரும் எழுந்தது.
இதன் பின்னர் நடந்த ஒரு கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கும் ஒரே கட்சி தேமுதிக தான் கூட்டணி என்பதால் குட்ட குட்ட குனிய மாட்டோம். நாங்கள் மீண்டு எழுவோம் என்றார்.மேலும்,அண்மைகாலமாக அதிமுக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக தேமுதிக அறிக்கை வெளிவந்த வண்ணம் உள்ளது இது அதிமுக – தேமுதிக கூட்டணியை மேலும் கேள்விக்குறியாக்கியது.
இந்நிலையில் தற்போது மாவட்ட செயலாளர்களுடன் வீடியோ காணொளின் மூலம் நடைப்பெற்ற ஆலோசனை கூட்டத்தில்,
ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி வைத்து கூட்டணி கட்சிகளுக்கு தான் பலன் கிடைக்கிறது தேமுதிக கட்சிக்கோ அல்லது தேமுதிக தொண்டர்களுக்கு எந்த பலனும் கிடைப்பதில்லை. எனவே வரக்கூடிய தேர்தலில் கூட்டணி இருக்கிறதோ இல்லையோ தேர்தலுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.இனி வரக்கூடிய தேர்தல்களில் தேமுதிக வெற்றி பெற வேண்டும் என்ற விதத்தில் வியூகம் அமைக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். இதன் மூலம் அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேற வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.