இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு வந்தால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்! ரஜினியை மிஞ்சும் பிரேமலதா விஜயகாந்த்..!!

0
171

இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு வந்தால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்! ரஜினியை மிஞ்சும் பிரேமலதா விஜயகாந்த்..!!

குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு ஏதாவது பாதிப்பு வந்தால் தேமுதிக முதல் ஆளாக களம் இறங்கும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசமாக பேசியுள்ளார்.

சிஏஏ போராட்டம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டது. குறிப்பாக சென்னை பழைய வண்ணாரபேட்டையில் இஸ்லாமியர்கள் தீவிரமாக களம் இறங்கினர். அங்கு போலீசார் லேசான தடியடி நடத்தி போராட்டத்தை கலைத்தனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்து விடுவித்தனர். இதைப்போலவே கோவையில் இரவு பகலாக போராட்டம் நடைபெற்றது.

டெல்லி வடகிழக்கு பகுதியில் சிஏஏ ஆதரவு மற்றும் எதிர்பாளர்களுக்கு இடையே பெரும் வன்முறை ஏற்பட்டு இந்தியாவின் தலைநகரமே பற்றி எரிந்தது. இதில் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களுக்கு பல இந்துக்கள் தங்களது வீட்டில் அடைக்கலம் கொடுத்து உதவினர். இந்த வன்முறை சம்பவத்தில் 35 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், பிரேமலாத விஜயகாந்த் திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், சிஏஏ இந்திய நாட்டின் பாதுகாப்பிற்காகத் தான் கொண்டுவரப்பட்டது என்பதை மத்திய, மாநில அரசுகள் விளக்க வேண்டும் என்றும், மேலும், குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு ஏதாவது பாதிப்பு வந்தால் தேமுதிக களத்தில் இறங்கும் என்றும் ஆவேசமாக பேசியுள்ளார். இஸ்லாமியர்களுக்கு பிரச்சினை என்றால் நான் முதல் ஆளாக போராடுவேன் என்று ரஜினிகாந்த் சொன்னது குறிப்பிடத்தக்கது.

Previous articleகுரூப் 4 மெயின்ஸ் இப்படி தான் இருக்கும் டிஎன்பிஎஸ்சி விளக்கம்.
Next articleதிமுகவிற்கு உச்சத்தில் இருக்கும் ராகு கேது! அடுத்தடுத்த நிகழ்வுகளால் அமைதியான அறிவாலயம்!!