அமெரிக்காவில் தற்பொழுது பணம் வீக்கம் மற்றும் பொருளாதார மந்தத்தன்மை அதிகரித்து இருப்பதால் அதிபர் ட்ரம்பவர்கள் உலக நாடுகளின் மீது விதித்திருந்த வரியை குறைப்பது மற்றும் நீக்குவது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு இரண்டு முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறார்.
அதன்படி, அதிபர் ட்ரம்பவர்கள் எடுத்து முக்கிய முடிவு பின்வருமாறு :-
✓ சீன நாட்டை தவிர்த்து மற்ற நாடுகளின் மீது அமெரிக்கா அரசு விதித்திருக்கக்கூடிய வரிகளை 90 நாட்களுக்குள் விலக்கி விடவும், பழைய படியே அதாவது முன்பிருந்தது போலவே அனைத்து பொருட்களின் மீதும் 10 சதவிகித வரி மட்டுமே விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
✓ ஸ்மார்ட்போன், லேப்டாப், கம்ப்யூட்டர் மற்றும் இதர எலக்ட்ரிகல் பொருட்களின் மீது அமெரிக்கா அரசு விதித்திருந்த ரெசிப்ரோக்கல் வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும் என அறிவித்திருக்கிறார்.
இதன் மூலம், அமெரிக்காவின் மந்தத்தன்மை மற்றும் பொருளாதார வீழ்ச்சி பணவீக்கம் போன்றவற்றிலிருந்து மீண்டும் அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என அதிபர் டிரம்ப் இது போன்ற முடிவுகளை எடுத்திருக்கிறார். அதிலும் குறிப்பாக இந்த முடிவுகள் எலக்ட்ரானிக் உற்பத்தியாளர்களுக்கு மிகப்பெரிய நற்செய்தியாகவும் முதலீட்டாளர்களுக்கு அதிக அளவு பலன் தரக்கூடிய மற்றும் லாபம் தரக்கூடிய செய்தியாகவும் இந்த வரி விலக்கு அமைந்திருக்கிறது.
அமெரிக்காவின் டிஜிட்டல் வர்த்தகத்தில் ஏற்பட்டிருக்க கூடிய சிக்கலை தவிர்ப்பதற்காக அமெரிக்க அதிபர் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப், ஹார்ட் டிரைவ்கள், கம்பியூட்டர் பிராசசர் மற்றும் மெமரி சிப்கள் போன்றவற்றிற்கான இறக்குமதி வரிகளை குறைத்திருக்கிறார். காரணம் எலக்ட்ரிக் பொருட்களில் 100 க்கு 99 பொருட்கள் அமெரிக்காவிற்கு வெளியில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் அமெரிக்காவில் எலக்ட்ரிக் வர்த்தகம் மிகவும் பாதிப்பை சந்தித்த நிலையில் இது போன்ற ஒரு முடிவுக்கு அமெரிக்கா வந்து இருக்கிறது.
அதிபராக பதவியேற்ற உடன் நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வேன் என அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில் அதற்கு நேர் மாறாக அதல பாதாளத்தை நோக்கி அமெரிக்காவை கொண்டு சென்று இருந்த நிலையில், திடீரென தன்னால் விதிக்கப்பட்ட வரிகளை தானே முன்வந்து விலக்கு அளிக்க முடிவு செய்து இருக்கிறார். இதனால் அமெரிக்காவில் இயல்பு வாழ்க்கை விரும்பும் என அமெரிக்கர்கள் நிம்மதி பெரு மூச்சு விட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.