தன்னுடைய ஆதிக்கத்தை google நிறுவனத்தின் மீதும் காட்டும் அதிபர் ட்ரம்ப்!!

0
5
President Trump shows his dominance over Google!!
President Trump shows his dominance over Google!!

அதிபர் ட்ரம்ப் அவர்கள் மீண்டும் அமெரிக்காவில் ஆட்சியை கைப்பற்றிய பொழுது சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்படி அவர் வெளியிட்ட அறிவிப்புகளில் ஒன்றுதான் google மேப்பில் இருக்கக்கூடிய மெக்சிகோ வளைகுடா என்ற பெயரை அமெரிக்க வளைகுடா என்று மாற்ற வேண்டும் என்பது.

அதிபர் ட்ரம்பினுடைய அறிவிப்பை ஏற்று google நிறுவனம் ஆனது மெக்சிகோ வளைகுடா என்ற பெயரை அமெரிக்கா வளைகுடா என்று மாற்றி உள்ளது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு இது அமெரிக்கா வளைகுடா என்றும் மெக்சிகோவில் இருக்கக்கூடிய மக்களுக்கு மெக்சிகோ வளைகுடா என்றும் google மேப்பில் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மற்ற பகுதிகளில் இருந்து google மேப்பில் தேடுபவர்களுக்கு மெக்சிகோ வளைகுடா மற்றும் அமெரிக்கா வளைக்குடா என இரண்டு பெயர்களும் காட்டும் விதமாக அமைக்கப்பட்டிருப்பதாகவும் google நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

Google நிறுவனத்தினுடைய பெட்ரோல் மேப்பிங் தரவு தளமானது அமெரிக்க அதிபர் உடைய அறிவிப்பை ஏற்று மெக்சிகோ வளைகுடா என்ற பெயரை அமெரிக்கா வளைகுடா என மாற்றி இருப்பது கூகுள் நிறுவனத்தின் மீது அதிபரின் உடைய ஆதிக்கத்தை செலுத்துவதாக அமைந்திருக்கிறது.

Previous articleஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு.. கல்லீரலில் தேங்கிய ஒட்டுமொத்த அழுக்குகளையும் அடிச்சி வெளியேற்றும்!!
Next articleஜனவரி 31 கடைசி தேதி.. இதை பண்ணவில்லை என்றால் பணம் கிடைக்காது!! மத்திய அரசு!!