தென்கொரிய அதிபர் யூன் அவசர நிலை அறிவிக்கப்பட்ட 6 மணி நேரத்திற்குள் அந்த அவசர நிலை பிரகடனத்தை வாபஸ் வாங்கியுள்ளது. எதிர் கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக தென்கொரிய அதிபர் யூன் தேசிய சபை கொடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அவசர நிலை பிரகடனத்தை திரும்பப் பெறப்படும் என அறிவித்தார்.
அமெரிக்காவின் நெருங்கிய நாடுகளில் ஒன்று தான் தென்கொரியா. ஆனால் வட கொரியா போன்ற நாடுகளுடன் உள்ள மோதல் காரணமாகவே அந்நாட்டில் பரபரப்பு நிலவி வந்தது. மேலும் இதன் காரணமாகவே தென்கொரிய அதிபர் யூன் அவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்தினார்.
தென்கொரியாவில் உள்ள கம்யூனிஸ்ட் சக்திகளிடம் இருந்து பாதுகாக்க தான் இந்த எமர்ஜென்சி நிலையை அமல்படுத்துவதாக அவர் அறிவித்தார். இதனை தொடர்ந்து அதிபர் திரை வாயிலாக மக்களுடன் உரையாற்றினார். அதில் வடகொரியாவின் கம்யூனிஸ்ட் சக்திகளிடம் இருந்து காக்கவும்,தேச விரோத சக்திகளிடம் இருந்து காக்கவும் இந்த அவசர கால பிரகடனத்தை நான் அறிவித்தேன் என்று கூறினார்.
இந்த அவசரநிலை பிரகடனத்தால் உள்நாட்டில் மோசமான எதிர்ப்பு கிளம்பியதால் வேறு என்ன செய்வதென்று அறியாமல் அறிவித்த அவசர நிலை பிரகடனத்தை வாபஸ் வாங்கியுள்ளார் தென்கொரிய அதிபர் யூன் சுக் யொல்.