இந்தியாவின் பெட்ரோலிய துறை அமைச்சர் வீட்டு உபயோக சிலிண்டர் களின் விலையானது 50 ரூபாய் உயர்த்தப்பட்டு இருப்பதாக அறிவித்திருக்கிறார். எப்பொழுதும் குறைவாக உயரக்கூடிய சிலிண்டர் விலை தற்பொழுது ஒரேடியாக 50 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டு இருப்பது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
இது குறித்து பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் பூரி தெரிவித்திருப்பதாவது :-
இதுவரை இந்தியாவில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் ரூ.803 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வந்த நிலையில் தற்பொழுது 50 ரூபாய் கூடி 853 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்றும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு சிலிண்டர்களை பெறக்கூடிய குடும்பங்களுக்கு 500 ரூபாயிலிருந்து 550 ரூபாய் ஆக விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாகவே சிலிண்டர் விலையானது ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் மாற்றி அமைக்கப்படுவது வழக்கமான ஒன்றாகும். மாதத்திற்கு ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை இது போன்ற சிலிண்டர் விலை ஏற்ற இறக்கங்கள் வெளியிடப்படும். கடந்த இரண்டு மாதங்களாகவே தொழில் நிறுவனங்களில் பயன்படுத்தப்படக் கூடிய சிலிண்டர்களின் விலை மட்டுமே உயர்ந்து வந்த நிலையில் ஏப்ரல் மாதம் 2025 ஆம் ஆண்டான இந்த மாதத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை திடீரென 50 ரூபாய் உயர்த்தப்பட்டிருப்பது இல்லத்தரசிகள் இடையே கவலையை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது.