அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் சாமானிய மக்கள் நெருக்கடி!! இன்று முதல்வர் ஆலோசனை!!
தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கின்றது.இந்த விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றது.
பொதுமக்கள் இந்த விலை உயர்வால் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகின்றது.இந்த விலை உயர்வை குறைக்கும் விதமாக அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
அந்த வகையில் இப்பொழுது அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்த்தப்பட்டதன் காரணமாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகின்றது.
இந்த ஆலோசனையானது சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறுகின்றது.மேலும் ஆலோசனை கூட்டத்தில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் அனைவரும் பங்கேற்க உள்ளனர்.
மேலும் இந்த கூட்டத்தில் விலை ஏற்றபட்டுள்ளதால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் குறித்து பேசப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றப்பட்டால் முதலில் பாதிக்க படுவது சாமானியர்கள் தான் என்றும் மேலும் இந்த விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டால் இன்னும் அவர்கள் கடுமையான இன்னல்களை சந்திக்க வேண்டும் என்றும் கூறப்படுகின்றது.
இவ்வாறு உள்ள இந்த விலை மதிப்பை கட்டுக்குள் வைத்திருக்கும் வகையில் தக்காளி ,சின்ன வெங்காயம் மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு தேவை படும் விதமாக உள்ள மளிகை பொருட்கள் அனைத்தும் போதிய அளவு உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும் என்று முதல்வர் கூறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.