விலை உயரும் மது பாட்டில்கள்!! அதிர்ச்சியில் மது பிரியர்கள்!!

Photo of author

By Gayathri

தமிழ்நாட்டில் சராசரியாக ஒரு நாள் ஒன்றுக்கு 70 லட்சம் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் அவ்வாறு விற்பனை செய்யப்பட்ட மது பாட்டில்களானது சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் விதமாக பல இடங்களில் தூக்கி வீசப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தமிழக அரசு இதற்கு முடிவு கட்டும் விதமாக புதிய திட்டம் ஒன்றினை வகுத்துள்ளது.

காலி மது பாட்டில்கள் சாலைகளிலும் காடுகளிலும் மற்றும் மழை பிரதேசங்களிலும் அதிக அளவில் வீசப்பட்டு கிடப்பதாகவும் அவை பெரும்பாலும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தவாதாகவும் குறிப்பாக நீலகிரி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் இதுபோன்ற சம்பவம் அதிக அளவில் நிகழ்வதாக உயர் நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை ஏற்காவிட்டால் மலைப்பிரதேசங்களில் இருக்கக்கூடிய டாஸ்மார்க் கடைகளில் மது பானங்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஏப்ரல் மாதத்திற்குள் காலி மது பாட்டல்களை திரும்ப பெரும் திட்டமானது செயல்முறை படுத்த தொடங்கப்பட்ட விடும் என்றும் இதற்காக சென்னை சேலம் திருச்சி மதுரை போன்ற நான்கு மண்டலங்களில் காலி மது பாட்டில்களை மொத்தமாக பெற்று அவற்றை மறுசுழற்சி செய்த தருவதற்கான டெண்டரை டாஸ்மார்க் நிறுவனமானது கோரி இருக்கிறது.

இதன் மூலம் டாஸ்மார்க் கடைகளில் ஏப்ரல் மாதம் முதல் மது பாட்டலுக்கு 10 ரூபாய் கூடுதல் விளைவை வைத்து விற்கப்படும் என்றும் காலி பாட்டில்களை திரும்ப கொடுப்பவர்களுக்கு அந்த 10 ரூபாய் ஆனது திரும்ப தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..