சுதந்திர தின விழாவில் 100 லட்சம் கோடி மதிப்பில் பிரதமர் மோடி அறிவித்த புதிய திட்டம்

Photo of author

By Anand

சுதந்திர தின விழாவில் 100 லட்சம் கோடி மதிப்பில் பிரதமர் மோடி அறிவித்த புதிய திட்டம்

நாடு முழுவதும் இன்று 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இன்று சுதந்திர தினத்தையொட்டி பாரத பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி நாட்டு மக்களுகாக உரையாற்றினார். அப்போது அவர் பேசியாவது, நாட்டு மக்கள், அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். நாட்டை உருவாக்கிய மற்றும் வளர்ச்சியடைய செய்தவர்களான மகாத்மா காந்தி, அம்பேத்கார்,நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் நேரு என அனைவரையும் இந்நேரத்தில் நினைவு கூர்கிறேன்.

ஒலிம்பிக் தடகளத்தில் நமது வீரர்கள் புதிய வரலாற்றை படைத்தது மிகப்பெரிய விஷயம். ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்கள், வீராங்கனைகள் இன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் பங்கேற்றது பெருமை அளிக்கிறது. இந்திய மண்ணில் விளைந்த பொருட்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கிறது.

சூரிய ஒளி மின்சாரமானது நாடு முழுவதுமுள்ள விவசாயிகளுக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பெருகி வரும் மக்கள் தொகையால் நாட்டில் விவசாய நிலப்பரப்பு சுருங்கி வருகிறது. நாடு முழுவதும் 70 சதவீத கிராமங்களுக்கு இணைய வசதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரூ.100 லட்சம் கோடி மதிப்பில் “பிரதமரின் கதி சக்தி”எனும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றும் இந்த சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமரின் கதி சக்தி திட்டம் மூலம் நாட்டில் தொழில்துறை மேலாண்மை, வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.