Breaking News

ராணுவ வீரர்களோடு தீபாவளி பண்டிகையை கொண்டாடும் பிரதமர் மோடி! வெளியான தகவல்

Prime Minister Modi Diwali Celebration with Army Soldiers

ராணுவ வீரர்களோடு தீபாவளி பண்டிகையை கொண்டாடும் பிரதமர் மோடி! வெளியான தகவல்

நாடு முழுவதும் வரும் அக்டோபர் 24 ஆம் தேதியன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த வருடம் போலவே காஷ்மீருக்கு சென்று ராணுவ வீரர்களோடு தீபாவளி கொண்டாடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இதுபோல ராணுவ வீரர்களோடு தீபாவளி கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல இந்த வருடமும் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு முன்னதாக வரும் 21 ஆம் தேதி அன்று கேதார்நாத் கோயிலுக்கு செல்கிறார். பின்னர் பிரதமர் மோடி அதே நாளில் பத்ரிநாத் கோயிலுக்கும் சென்று வழிபட போகிறார்.

பின்னர் 23 ஆம் தேதி அன்று அயோத்தியிள் நடக்கும் பிரம்மாண்டமான தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்க உள்ளார். இதனை தொடர்ந்து 24 ஆம் தேதி தீபாவளி தினத்தில் காஷ்மீர் பகுதிக்கு சென்று அங்குள்ள ராணுவ வீரர்களோடு தீபாவளி கொண்டாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment