இன்று காலை 11:30 மணிக்கு மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்!

0
117

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றதும், மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

இந்நிலையில், இந்த மாதத்திற்கான மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11.30 மணிக்கு தொடங்க இருக்கிறது. இது 85-வது நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

மகாத்மா காந்திஜியின் நினைவு தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கிறார். இதனால் காலை 11.30 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை, கொரோனா தடுப்பூசிகள் குறித்து பிரதமர் மோடி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleஇரவு நேர ஊரடங்கு ரத்து- கர்நாடக அரசு அதிரடி அறிவிப்பு!
Next articleபிரான்சை விடாமல் துரத்தும் கொரோனா- பாதிப்பு எண்ணிக்கை 1.88 கோடியை கடந்தது!