புதிய நாடாளுமன்ற வளாகத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி! பணியாளர்களுடன் கலந்துரையாடல்

புதிய நாடாளுமன்ற வளாகத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி! பணியாளர்களுடன் கலந்துரையாடல்

டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற கட்ட‌ட‌த்தை பிரதமர் மோடி திடீரென ஆய்வு செய்தார். நாடாளுமன்றத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள மக்களவை, மாநிலங்களவை வளாகத்திற்கு சென்று பார்வையிட்டார். பின்னர், கட்ட‌ட பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்களிடமும் கலந்துரையாடிய அவர், அதிகாரிகளிடம் கட்ட‌ட பணிகள் குறித்து கேட்டறிந்தார். திடீரென பிரதமர் மோடி வந்த‌தைப் பார்த்து அங்கு இருந்த பணியாளர்கள் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

பிரதமர் மோடி பதவிக்கு வந்த பிறகு இந்த புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்டும் பணியை துவக்கி வைத்தார். ஏற்கனவே இருக்கும் கட்டிடம் பழமையானது என்பதாலும், புதியதாக அதில் எந்த மாற்றங்களும் செய்ய முடியாது என்பதாலும் தற்போதைய தொழில்நுட்ப வசதிக்கு ஏற்ப புதிய கட்டிடம் கட்டும் பணியானது ஆரம்பிக்கப்பட்டது.

இந்த புதிய பாராளுமன்ற கட்டிடமானது  அடுத்த 150 ஆண்டுகளை கருத்தில் கொண்டு உயரிய தொழில்நுட்ப வசதிகளை கொண்டு கட்டப்பட்டுள்ளது. சென்ட்ரல் விஸ்டா திட்டத்தில் கட்டப்பட்டு வரும் இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திடீரென்று பார்வையிட்டு, பணிகளை ஆய்வு செய்தார். அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுடன் நடந்து வரும் பணிகள் குறித்தும் அவர் கலந்துரையாடினார்.