பிரதமர் மோடியின் முதல் இலக்கு தமிழ்நாடு? பாஜக தலைவர்கள் படையெடுப்பது ஏன்?

0
224
#image_title

பிரதமர் மோடியின் முதல் இலக்கு தமிழ்நாடு? பாஜக தலைவர்கள் படையெடுப்பது ஏன்?

2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜக தலைவர்கள் தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்கின்றனர். குறிப்பாக பிரதமர் மோடியின் செயல்பாடுகள் தமிழ்நாட்டை நோக்கியே இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி அளித்த நேர்காணலில் தமிழ்நாட்டை பற்றிய தனது பார்வை குறித்து கூறியிருந்தார். குறிப்பாக அதில் தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டையில் பங்கேற்றிருந்தார்.

அப்போது பேசிய பிரதமர், தமிழ் மொழியை உலக அரங்கில் எடுத்துச்செல்ல தன்னால் முடிந்த முயற்சியை செய்ததாக பேசினார். மேலும் தமிழக மக்கள் குறித்து பேசும்போது கண்கலங்கினார்.

மறுபுறம் எதிர்க்கட்சிகள் தமிழ்நாடு மீதான பாஜகவின் படையெடுப்பை கடுமையாக விமர்சிக்கின்றனர். தமிழ்நாட்டில் பாஜக டெபாசிட்கூட பெறாததால்தான், அவர்கள் தமிழ்நாட்டை குறிவைப்பதாக கூறுகின்றனர்.

இதனிடையேதான், தமிழ்நாட்டில் பிரதமர் மோடி 4 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்கிறார். ஏப்ரல் 9,10,13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் வாகன பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார்.

ஏற்கனவே அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட கட்சியின் பிரபலங்கள் தமிழ்நாட்டில் தீவிர வாக்கு சேகரிப்பில் இருக்கின்றனர். தற்போது தேசிய தலைவர்களும் தமிழ்நாட்டை நோக்கி வருகை புரிவதால், தேர்தல் நிலவரத்தில் மாற்றம் இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால் தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளுக்குள்தான் போட்டி இருக்கும் என்றும், பாஜக அருகில்கூட நெருங்க முடியாது என்றும் திமுக, அதிமுக போன்ற கட்சிகள் விடாப்பிடியாக சொல்லி வருகின்றனர். என்ன இருந்தாலும், ஒருவேளை பாஜக மறைமுகமாக தங்களது செல்வாக்கை அதிகரித்து கொண்டதோ, என்று யோசித்தாலும் ஆச்சரியமில்லை.

Previous articleகோவையில் திமுகவின் செல்வாக்கு சரிந்ததா?
Next article“பைனாக்குலரை சரியாக பார்க்கவில்லை” மதுரையில் சு.வெங்கடேசன் – சரவணன் இடையே வலுக்கும் மோதல்!!