கோடை காலம் துவங்கியதால் மக்கள் பலரும் வெயிலில் படாத பாடு பட்டு வரும் நிலையில் பல மக்கள் தங்கள் வீடுகளுக்கான புதிய ஏசிகளை வாங்கும் நோக்கத்தில் சென்று கொண்டிருக்கின்றனர். இது போன்ற ஒரு சூழ்நிலையை சைபர் கிரைம் குற்றவாளிகள் பயன்படுத்திக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி ஏசி யோஜனா என்ற திட்டத்தின் கீழ் கோடி பேருக்கு இலவச எசி வழங்க மத்திய அரசு முன்வந்திருப்பதாகவும் இந்த திட்டம் மே மாதம் முதல் துவங்க இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராம் பேஸ்புக் போன்ற பக்கங்களில் செய்திகளை பரப்பி வருகிறது.
அந்த செய்தியில், காற்றில் கரியமில வாயு வெளியேறுவதை குறைக்கவும், மின்சார தேவை மற்றும் மக்களின் மின்கட்டணங்களை குறைக்கவும் 5 ஸ்டார் ஏசியை மத்திய அரசு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது என்றும் பிரதமர் மோடி யோஜனா என்ற பெயரின் கீழ் மே மாதம் முதல் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் இத்திட்டத்திற்கு பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தில் பயன்பெற நினைப்பவர்கள் யமுனா பவர் லிமிடெட் என்ற வலைதளத்திற்கு சென்று பதிவு செய்தால் 30 நாட்களில் இலவச ஏசி கிடைக்கும் என்பது போல குறிப்பிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டு இருக்கக்கூடிய செய்தி :-
பிரதமர் நரேந்திர மோடி ஏசி யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ஒன்றரை கோடி மக்களுக்கு ஏசி வழங்கப்படும் என்ற அறிவிப்பு பொய்யானது என்றும் மதியம் என் துறை அமைச்சகத்தில் இருந்து இது போன்ற எந்த விதமான செய்திகளும் வெளிவிடப்படவில்லை என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற போலியான தகவல்கள் பொதுமக்களின் உடைய தனிப்பட்ட விவரங்களை திருடுவதற்கான வழி என்றும் இது போன்ற இணைப்புகளை மக்கள் கிளிக் செய்த தங்களுடைய தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம் என்றும் மத்திய அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.