பாஜக கோவை பேரணியில் கலந்துக் கொள்கிறார் பிரதமர் நரேந்திரமோடி!
இந்தியா முழுவதும் வருகின்ற ஏப்ரல் 19தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்களிடம் வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்கவும், தமிழகத்தில் நிலவுகின்ற திராவிட கட்சிகளின் ஆளுமையில் இருந்து மக்களை மீட்கவும் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றார்.
தொடர்ந்து, கடந்த இரண்டு மாதங்களாக பாஜக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டம் மற்றும் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படுகின்ற நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு உரையாற்றி வருகிறார்.
அந்த வகையில் இன்று மாலை கோவையில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுமார் இரண்டரை கிலோமீட்டர் தூரத்திற்க்கு சாலை மார்க்கமான பேரணியில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துக் கொள்ளவுள்ளார்.
முன்னதாக நரேந்திர மோடி கலந்துக்கொள்ளும் இந்த பேரணிக்கு கோவை காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் பாஜக சார்பில் நீதிமன்றத்தை அனுகி அனுமதி வாங்கப்பெற்றது குறிப்பிடதக்கது.
பிரதமரின் தமிழக வருகையை உறுதி செய்யும் வகையில், தமிழகத்தில் பாஜக கூட்டணியிக்கு பேரும் ஆதரவு உள்ளதாகவும், மக்கள் இந்த கூட்டணியை வரவேற்பதாகவும் பிரதமர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் இன்று கோவை வரவுள்ள நிலையில் டிரோன் கேமராக்கள் பறப்பதற்க்கு தடை உள்ளிட்ட பல்வேறு கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது.