பிரதமர் ஷின்சோ அபே மறைவிற்கு தேசிய கொடியை அரை கம்பத்தில் கட்டி இன்று துக்க நாளாக அனுசரிப்பு!!
டோக்கியாவில் உள்ள ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே.இவர் கடந்த 2012 முதல் 2020 வரை ஜப்பானில் பிரதமராக பணியாற்றியுள்ளார்.இந்நிலையில் அந்நாட்டின் நரா என்ற நகரத்தில் ஷின்சோ அபி இன்று நடைபெற்ற பொது விழாவில் ஒன்றில் பங்கேற்றார்.
இவ்விழா சாலை பகுதிகளில் நடைபெற்று இருப்பதால் அந்நிகழ்ச்சியில் அபே உரையாடிக் கொண்டிருந்த போது திடீரென்று துப்பாக்கிக்கி சூடு நடத்தப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் பங்கேற்ற நபர் தன் கோட்டில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அபேயை நோக்கி சுட்டார்.
சுட்ட நேரத்தில் அதே இடத்தில் திடீரென்று மயங்கி சாலையின் கீழே விழுந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடினார்கள். பின்னர் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர்கள் காயமடைந்த அபேவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
தாக்குதல் நடத்திய நபரை கைது செய்து அந்நாட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மருத்துவமனையில் ஷின்சோ அபேக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதையொட்டி நேற்று மாலை 5.03 மணிக்கு அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் அறிவித்தனர்.
ஷின்ஜோ அபே சுட்டு கொல்லப்பட்டதற்கு பிரதமர் மோடி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ரஷிய அதிபர் புதின், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ், இத்தாலி பிரதமர் மரியோ டிராகி, தைவான் அதிபர் சாய் இங் வென் என உலக தலைவர்கள் அவைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதேபோன்று அமெரிக்க அதிபர் பைடன், ஜப்பான் பிரதமரை தொடர்பு கொண்டு அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொண்டார் என அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே மறைவை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்தியாவில் இன்று ஒரு நாள் துக்கம் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்படி நாடாளுமன்றம் செங்கோட்டை மற்றும் ஜனாதிபதி மாளிகையில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.