நீட்டால் இழந்த மூன்று உயிர்கள் மறுபக்கம் பிரதமரின் 20 நாள் பிறந்தநாள் கொண்டாட்டம்! நெட்டிசன்கள் கொந்தளிப்பு!
அரசியல் கட்சி தலைவர்களின் பிறந்தநாள் வரும்போது அவரது தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும்,போஸ்ட்டர் ஒட்டியும் மக்களுக்கு இனிப்புக்கள் வழங்கியும் முடித்துகொள்வர்.மேலும் ஓர் சிலர் ரத்த தானம்,வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு பொருட்கள் வழங்குவது,சாப்பாடு வழங்குவது என்று ஓர் படி அதிகமாக கொண்டாடுவர்.அந்தவகையில் பாஜக தலைவர் மற்றும் பிரதமாரான மோடிக்கு இன்று பிறந்தநாள்.
அவர் பிறந்தநாளையோட்டி நமது தமிழகத்தில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் நமது சென்னை கடற்கரையை சுத்தம் செய்யும் வேலையில் இறங்கியுள்ளனர்.இருவரும் சென்னை கடற்கரையில் உள்ள குப்பைகளை எடுத்து சுத்தம் செய்து,தூய்மை இந்தியா என்ற வகையில் அவரது பிறந்தநாள் விழாவை தொடங்கினர்.அதனையடுத்து அங்கு கொடி ஏற்றியும் கேக் வெட்டியும் அங்குள்ள மக்களுக்கு கொடுத்து வந்தனர்.பிரதமரின் பிரத்நாளை முனிட்டு இன்று ஓர் நாளோடு கொண்டாட்டத்தை நிறுத்தி விடாமல் இன்று முதல் தொடங்கி 20 நாட்களுக்கு கொண்டாடப்போவதாக கூறினர்.
அதாவது தமிழகத்தில் வரப்போகும் 20 நாட்கள் அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல நிகழ்சிகளை நடத்துவதற்கு திட்டமிட்டு உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.ஓர் நாளில் பிறந்தநாளை கொண்டாடி முடிக்கும் நிலையில் இவர்கள் 20 நாட்களாக கொண்டாடுவது அனைவரையும் வியக்க வைக்கிறது.அதுமட்டுமின்றி தற்போது நமது தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தினால் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் வருத்தமடைய செய்தது.
அதுமட்டுமின்றி அது பெரும் இழப்பாக இருந்து வருகிறது.இவ்வேளையில் நீட் தேர்வை ரத்து செய்யும் படி தமிழக அரசும் தொடர்ந்து மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.ஆனால் மத்திய அரசோ தமிழகம் வைக்கும் வேண்டுகோளை கண்டுகொள்வதில்லை.இவ்வேளையில் நமது தமிழகத்தில் பிரதமர் பிறந்தநாளை கோலாகலமாக 20 நாட்கள் கொண்டாடுவது நியாயத்திற்குரியாத என நெட்டிசன்கள் கொந்தளித்து கூறி வருகின்றனர்.