நாளை மறுநாள் மழை பெய்யத் இருக்கும் மாவட்டங்கள்! சென்னை வானிலை ஆய்வு மையம் கடுமையான எச்சரிக்கை!

0
66

தமிழ்நாட்டில் தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதோடு மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக்கூடிய கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் உள்ளிட்ட காரணங்களால் நாளைய தினம் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது தென்மாவட்டங்கள் டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதோடு காரைக்கால் உள்ளிட்ட இடங்களிலும் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது. மற்ற கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

நாளை மறுநாள் வட உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.வரும் 20ம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

சென்னையை பொருத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நகரத்தின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு கூறியிருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.