2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரதமரின் ஜன்தன் திட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதத்திற்கு உள்ளாகவே 10.5 லட்சம் வங்கி கணக்குகள் இயக்க முறையில் தொடங்கப்பட்டது.
இந்த கணக்குகளை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்றும் இதற்கான மறு கேஒய்சி மாற்றப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது இந்த கணக்குகள் தொடங்கப்பட்டு பத்தாண்டுகள் ஆன நிலையில் இந்த கணக்குகளை புதுப்பிக்கும் மற்றும் மறு கேஒய்சி அப்டேட் செய்வதற்கான விதிமுறைகள் வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஏடிஎம், மொபைல் பேங்கிங், இணைய வங்கி மற்றும் பிற டிஜிட்டல் சேனல்கள் போன்ற அனைத்து சேனல்கள் மூலம், கைரேகைகள், முக அங்கீகாரம், கேஒய்சி ஆவணங்களில் எந்த மாற்றமும் இல்லாத அறிவிப்புகளை எடுப்பது போன்ற அனைத்து வழிமுறைகளையும் மேற்கொள்ளும்படி மத்திய அரசு வங்கிய ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாநில லேபல் வங்கியாளர்கள் குழு (எஸ்.எல்.பி.சி.க்கள் / யு.டி.எல்.பி.சி) மற்றும் முன்னணி மாவட்ட மேலாளர்களின் (எல்.டி.எம்) பங்கு முக்கியமானது என்றும், மறு கேஒய்சி-ஐ இயக்கமாக மேற்கொள்ள மக்களை அணிதிரட்டுவதில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகமும், கிராம பஞ்சாயத்துகளும் இதற்கு உதவி புரிய வேண்டும் என்று மத்திய அரசால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை முதல்முறையாக கொண்டு வந்த பொழுது வங்கி ஊழியர்கள் எந்த அளவிற்கு இதனை வரவேற்று அதிக அளவில் வேலை பார்த்தனரோ, அதே அளவு ஊக்கத்துடனும் உத்வேகத்துடனும் மீண்டும் பணிபுரிய வேண்டுமென மத்திய அரசு கூறியுள்ளது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்க மறு கேஒய்சி பணியை முடிக்க வேண்டும் என்றும் திரு நாகராஜு வலியுறுத்தியுள்ளார்.
மறு கேஒய்சி முறையை குறுகிய காலகட்டத்திற்குள் செய்து முடிக்க வேண்டிய நிலை உள்ளதால், முக்கியமான இடங்களில் அதிக ஊழியர்களை பணியமர்த்த மத்திய அரசு வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.