இந்தியா முழுவதும் சூரிய மின் ஆற்றலை பயன்படுத்தி மின்சார தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சோலார் பேனல்கள் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதற்காக பல திட்டங்களையும் வகுத்து அதன் பலரும் பயன்பெற்று வரக்கூடிய நிலையில், இன்னும் சில முக்கிய தகவல்களை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.
மத்திய அரசு அறிவித்ததன் படி :-
75 ஆயிரம் கோடி மதிப்பில் பொதுமக்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டி பிரதமரின் சூரிய வீடு திட்டமானது உருவாக்கப்பட்ட இருப்பதாகவும் இதில் உள்ள மாநிலத்தை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களுடைய வீடுகளின் மேற்கூறையில் சோலார் பேனல் பொருத்திக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
✓ 1 கிலோ யூனிட் அல்லது 2 கிலோ யூனிட் வரை ஒரு வீட்டிற்கு சோலார் பேனல் பொருத்த வேண்டும் என்றால் அதற்காக மத்திய அரசு 30,000 ரூபாய் மானியமாக வழங்குகிறது.
✓ கூடுதல் திறன் கொண்ட சோலார் பேனல்களை பொருத்துபவர்களுக்கு கூடுதலாக 1 கிலோ யூனிட்டுக்கு 18,000 ரூபாய் என 3 கிலோ யூனிட்டுக்கு மொத்தமாக 78,000 ரூபாய் வரை வழங்குகிறது.
✓ அதிலும், 3 கிலோ யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தக்கூடிய குடும்பங்கள் என்றாலும் மானியத்தின் உச்சவரம்பு 78,000 ரூபாய் மட்டுமே என்பதையும் திட்டவட்டமாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
விண்ணப்பிக்கும் முறை :-
மத்திய அரசினுடைய மின்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் உங்களுடைய பெயர் மாவட்டம் மற்றும் பிற விவரங்களை உள்ளீடு செய்த விண்ணப்பிப்பதன் மூலம் உங்களுடைய வீடுகளில் மேற்கூரைகளில் சோலார் பேனல்களை அரசு மானியத்துடன் பொருத்த முடியும்.