உலகெங்கும் கொரோனாவின் தாக்கம் மக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. அந்த வகையில் தலைமை ஆசிரியர் ஒருவர் இட்லி விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் கம்மம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மரகணி ராம்பாபு என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். அங்கு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், பள்ளி நிர்வாகம் அதிரடியான அறிவிப்பு ஒன்றை தலைமை ஆசிரியருக்கு தெரிவித்தது.
தற்போது பள்ளிக்கு தலைமை ஆசிரியர் தேவையில்லை என்று பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. தனது தலைமை ஆசிரியர் பதவியினால் கிடைத்த ஊதியத்தை மட்டுமே நம்பி குடும்பம் நடத்தியவர் தற்போது தள்ளுவண்டிக்கு மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர் பணியின் போது மாதம் 22,000 சம்பாதித்த ராம்பாபு தற்போது தெருவில் தள்ளுவண்டியில் இட்லியை விற்று தினசரி 200 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும் இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளார்.
கொரோனா பாதிப்பால் ஒரு தலைமை ஆசிரியரின் வாழ்க்கை சூழலே அடியோடு மாறிப்போன சம்பவம் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று இந்தியா முழுக்க பலாயிரம் மக்கள் பொருளாதாரம் இழந்து வறுமையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.