அரசு கூறியதை மீறிய தனியார் பள்ளிகள்? கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை வழக்கு!
கள்ளக்குறிச்சி சின்னசேலம் பகுதியில் தனியார் பள்ளியில் படித்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து பெரிய கலவரமே வெடித்தது. நேற்று போராட்டக்காரர்கள் பள்ளியை சூழ்ந்து அங்குள்ள பேருந்து மற்றும் இதர பொருட்களையும் தீ வைத்து எரித்தனர். அவ்வாறு தீ வைத்து எரித்ததையடுத்து எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்று அனைத்து தனியார் பள்ளிகளும் இயங்காது என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கத் தலைவர் நந்தகுமார் தெரிவித்தார்.
ஆனால் காரணம் இன்றி தனியார் பள்ளிகள் விடுமுறை விட்டால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்தது. இருப்பினும் தமிழ்நாட்டில் சில பள்ளிகள் மட்டுமே இன்று வழக்கம் போல் இயங்கியது. அவ்வாறு அரசாங்கம் கூறியதை மீறி இயங்காத தனியார் பள்ளிகளை காவல்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.இயங்காத தனியார் பள்ளிகள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை நேற்றே கூறியிருந்தது. அதனால் அரசு கூறியதை மீறி விடுப்பு அளித்துள்ள பள்ளிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.