திடீரென்று 400 திரையரங்குகள் மூடல்! அதற்கான காரணம் இவை அனைத்தும் தான்!

0
95
Suddenly 400 theaters closing! All of these are the reason why!
Suddenly 400 theaters closing! All of these are the reason why!

திடீரென்று 400 திரையரங்குகள் மூடல்! அதற்கான காரணம் இவை அனைத்தும் தான்!

ஆந்திராவில் தற்போது முதலமைச்சராக ஜகன்மோகன் பதவியேற்ற நிலையில் சினிமா டிக்கெட் களில் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திரையரங்கு உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி வருகின்ற நான் இதை தொடர்ந்து திரையரங்குகள் உரிமையாளர்கள் மற்றும் நடிகர்கள் முதல்வரை சந்தித்து சினிமா டிக்கெட் விலையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று சினிமா டிக்கெட் விளையும் உயர்த்தப்பட்டது.

மேலும் கொரோனா தொற்று காரணமாக ரசிகர்கள் திரையரங்குக்கு வருவது குறைந்துள்ளது தளங்களில் வெளியாகும் படங்களை தான் தாங்கள் குடும்பத்துடன் பார்த்து ரசிப்பதால் திரையரங்கு வந்து செய்யும் செலவுகள் பெரும்பாலும் குறைந்துள்ளது என பொதுமக்கள் கூறி வருகின்றனர். மேலும் இதன் காரணமாகவும் பெரிய நடிகர்களின் படம் எதுவும் வெளியாகாமல் இருப்பதாலும் ரசிகர்கள் திரையரங்குக்கு வருவது மிக குறைந்துள்ளது. சதவீத ரசிகர்கள் மட்டுமே தியேட்டர்களுக்கு வந்து படம் பார்ப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். மேலும் ரசிகர்களின் வருகை குறைந்ததால் ஒரு காட்சிக்கு 2000 முதல் 3000 என்கிற நிலையிலேயே மொத்த டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த பணத்தை வைத்துக்கொண்டு சினிமா தியேட்டர்களை சரியாக பராமரிக்க முடியவில்லை எனவும் திரையரங்கு உரிமையாளர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் ஏசி திரையரங்குகளுக்கு பராமரிக்க 5000 ரூபாயும் ஏசி அல்லாத திரையரங்கங்களை பராமரிக்க 2000 ரூபாயும் தேவைப்படும் நிலையில் இது தவிர மின் கட்டணம் உள்ளிட்ட இதர செலவுகள்  ஆகின்றன ஆனால் சமீப காலமாக திரையரங்கிற்கு 10 அல்லது 15 நபர்கள் மட்டுமே படம் பார்க்க வருவதால் இந்த தொகையை வைத்து எதுவும் செய்ய முடியவில்லை எனவும் திரையரங்கு உரிமையாளர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு தொடர்ந்து நஷ்டம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு ஆந்திராவில் 400  தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது அல்லது பொங்கல் பண்டிகையின் போது முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்கள் வெளியாகும் தியேட்டர்கள் மூடிவைக்க திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர் இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K