வங்கியில் அனைத்தும் தனியார் மயமாக்கும் நடவடிக்கை! மோடி அரசை வன்மையாக கண்டித்து காங்கிரஸ் டூவிட்டர் பதிவு!
காங்கிரஸ் அரசானது மோடியையும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸின் செய்தி தொடர்புப் பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று அவரதின் டூவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவில் முன்னதாகவே ஆர்பிஐ யின் எச்சரிக்கையை மீறி ரூபாய் நோட்டுகள் வாபஸ் போன்ற நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. அதன் மூலம் மக்கள் மற்றும் நாடு முழுவதும் பெரும் சிரமத்திற்கு உள்ளகினார்கள் என கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது பொதுத்துறை வங்கிகளை குறைக்கும் முயற்சியில் தீவிரமகா இடுப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக ஆர்பிஐ எச்சிரிக்கை விடுத்துள்ளது. தற்பொழுது உள்ள நிலையிலே வங்கிகளின் எண்ணிக்கை 27 ல்லிருந்து 12 ஆக குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கயை மேலும் குறைத்து ஒரே ஒரு பொதுத் துறை வங்கி என்ற பெயரில் உருவாக்க தற்போது அரசானது முயற்சி செய்து வருகின்றது எனவும் கூறினார். இதனையடுத்து இது பேரழிவுக்கு வழி வகை செய்கிறது எனவும் ஆர்பிஐ எச்சரித்துள்ளது. இதனை மோடி அரசானது வழக்கம் போல தனக்கு தோன்றுவை மட்டுமே செய்வேன் என கூறி செயல்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.