ப்ரியாமணியா இது.? இப்போ எப்படி இருக்கார் தெரியுமா.? ஷாக்கான ரசிகர்கள்.!!

Photo of author

By Vijay

ப்ரியாமணியா இது.? இப்போ எப்படி இருக்கார் தெரியுமா.? ஷாக்கான ரசிகர்கள்.!!

Vijay

கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான ‘கண்களால் கைது செய்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ப்ரியா மணி.

அதனைத் தொடர்ந்து, ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த பிரியாமணி, நடிகர் கார்த்தியுடன் பருத்தி வீரன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். மேலும், அந்த படம் அவரது திரைவாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அதன் பிறகு, நடிகை பிரியாமணி தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார்.

மேலும், இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். அதன் பிறகு உடல் எடையை அதிகரித்து இருந்த பிரியாமணி திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில், அவர் தற்போது மீண்டும் நடிக்கத் துவங்கியுள்ளார்.

அதன் காரணமாக நடிகை பிரியாமணி தற்போது தனது உடல் எடையை குறைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு செம க்யூட்டாக உள்ளார்.

சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில், அவர் தற்போது உடல் எடையை குறைத்து பிட்டாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் அதிக அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

https://www.instagram.com/p/CVhKzUgBIHC/?utm_medium=copy_link