தோனியின் முதல் தமிழ் படத்தில் பிரியங்கா மோகன்… ஹீரோ இவர்தான்!

Photo of author

By Vinoth

தோனியின் முதல் தமிழ் படத்தில் பிரியங்கா மோகன்… ஹீரோ இவர்தான்!

Vinoth

தோனியின் முதல் தமிழ் படத்தில் பிரியங்கா மோகன்… ஹீரோ இவர்தான்!

தோனி தன்னுடைய திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக தமிழ் படங்களை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி இப்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்நிலையில் இப்போது தமிழில் அவரது தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ஒரு படத்தை தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இதுவரை தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம சில குறும்படங்களைத் தயாரித்துள்ளது.

இந்த படத்துக்கான கதையை தோனியின் மனைவி சாச்ஷி எழுத ரமேஷ் தமிழ் மணி என்பவர் இயக்க உள்ளார். இந்த படம் இந்தியா முழுவதும் மற்ற மொழிகளிலும் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த நிறுவனத்துக்காக படங்களில் நடிக்க விஜய், நயன்தாரா உள்ளிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்நிறுவனத்தின் முதல் படத்தில் பிரியங்கா மோகன் மற்றும் பிக்பாஸ் பிரபலம் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் நடிக்க உள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் சொல்லப்படுகிறது.

இது சம்மந்தமாக சமீபத்தில் வெளியான அறிவிப்பில் ”இந்திய அளவில் பிரபலமான நட்சத்திர கிரிக்கெட் வீரராக தோனி திகழ்ந்தாலும், அவருக்கும் தமிழக மக்களுக்கும் இடையேயான பந்தம் பிரத்யேகமானது. சிறப்பானது. இந்த நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் தோனி என்டர்டெய்ன்மெண்ட், தனது முதல் படத்தை தமிழில் தயாரிக்கிறது.” எனத் தெரிவித்து இருந்தார்கள்.