45 பந்துக்கப்புறம் சந்திரமுகியா மாறுன கோலி… அஸ்வின் புகழாரம்!

0
91

45 பந்துக்கப்புறம் சந்திரமுகியா மாறுன கோலி… அஸ்வின் புகழாரம்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய கிரிக்கெட் போட்டி மிகவும் பரபரப்புடன் சென்று முடிந்தது.

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 போட்டியில் பாகிஸ்தானை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்த முக்கியக் காரணமாக அமைந்த இந்திய வீரர் விராட் கோலியை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூத்த ஆல்-ரவுண்டர் சோயப் மாலிக் பிரமித்து பாராட்டியுள்ளார். அக்டோபர் 23, ஞாயிற்றுக்கிழமை, கோஹ்லி தனது ஏ-கேமை வெளிப்படுத்தினார் மற்றும் ஆட்டமிழக்காமல் 53 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் எடுத்தார்.

இந்நிலையில் இந்த இன்னிங்ஸை கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையின் சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றாக சச்சின் உள்ளிட்ட பலரும் புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கோலியோடு கடைசி ஓவரில் இணைந்து விளையாடி வெற்றிக்கு தேவையான ரன்களை புத்திசாலித்தனமாக சேர்த்த அஸ்வின் கோலியைப் பற்றி தன்னுடைய யுட்யூப் சேனலில் பேசியுள்ளார்.

அதில் “விராட் கோலிக்குள்ள என்ன பூந்ததுன்னு தெரியல. இந்த மாதிரி ஷாட் ஆடி… அதவிடுங்க 45 பந்துக்கப்புறம் கங்காவ இருந்த அவர் சந்திரமுகியா மாறிட்டாரு. நான் களத்துக்குள்ள போனப்ப சந்திரமுகி மாறி கண்ண வச்சிகிட்டு அங்க அடி இங்க அடின்னு சொன்னாரு. நம்மளால முடிஞ்சத செய்யணும்னு நெனச்சுகிட்டு நான் விளையாடினேன்” எனக் கூறியுள்ளார்.

அஸ்வின் கடைசி ஓவரில் லெக் சைடில் வீசப்பட்ட பந்தை வைட் வாங்கி கூடுதலாக ஒரு ரன் பெற்றது, ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது.