‘புரோபா – 3’ செயற்கைகோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்!

0
117
'Proba-3' satellites successfully deployed: ISRO scientists inform!
'Proba-3' satellites successfully deployed: ISRO scientists inform!

உலகில் முதல் முறையாக, இரண்டு செயற்கைக்கோள்களான கொரோனாகிராஃப் மற்றும் ஆக்ல்டர் ஆகியவை சில மில்லிமீட்டர்கள் இடைவெளியில் 144 மீ அல்லது அதற்கு மேற்பட்ட தூரத்தில் இருக்கும். இதன் விளைவாக, இந்த ஜோடி ஒரு மெய்நிகர் ராட்சத செயற்கைக்கோளை போல செயல்படும்.

மேலும், இது தரையில் இருந்து பெறப்படும் கட்டளைகள் எதுவும் இல்லாமல் தானாகவே இயங்கும். தற்போது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், ‘புரோபா – 3’ என்ற பெயரில் இரு செயற்கைக்கோள்களை வடிவமைத்துள்ளது.

இவை, சூரியனின் ஒளிவட்ட பகுதியை ஆய்வுசெய்ய உள்ளன.மொத்தம், 550 கிலோ எடை உடைய அந்த செயற்கைக்கோள்களை சுமந்தபடி,  இந்த 2 செயற்கைகோள்களையும், முதலில் குறைந்தபட்சம் 600 கிலோ மீட்டர் தூரத்திலும், அதிகபட்சம் 60,530 கிலோ மீட்டர் உயரமுள்ள நீள்வட்ட சுற்றுவட்ட பாதையிலும் நிலை நிறுத்தி, பின்னர் இணை சுற்றுவட்டப் பாதையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஆய்வுமைய ஏவுதளத்தில் இருந்து, இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி., – சி59 ராக்கெட் இன்று மாலை, 4:08 மணிக்கு விண்ணில் பாய இருந்தது.

இதற்கான, 25 மணி நேர, ‘கவுன்ட் டவுன்’ 4/12/2024 பிற்பகல், 3:08 மணிக்கு துவங்கியது. ராக்கெட்டின் இயக்கம் மற்றும் செயல்பாடுகளை, இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்காணித்து வந்தனர். அதில், செயற்கைக்கோளில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து பி.எஸ்.எல்.வி.,-சி 59 ராக்கெட் ஏவுவது 5/12/2024 மாலை 4:12 மணிக்கு ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்து உள்ளது.

அதன்படி சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக, ப்ரோபா -3 எனும் இரட்டை செயற்கைகோள்களை தாங்கிய பிஎஸ்எல்வி -சி 59 ராக்கெட்டை நேற்று மாலை 4:04 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

ஶ்ரீ ஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் செலுத்தப்பட்ட 18வது நிமிடத்தில் அதாவது 4:22 மணியளவில் செயற்கோள்கள் அவற்றின் புவிவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.

Previous articleஒரு கை காப்பு-னால் கடைக்கு சீல்!! திருப்பதி மலையில் பரபரப்பு!!
Next articleகாசா மீது போர் தொடுக்க கூடாது!! இஸ்ரேலிய பிணைக்கைதிகளை கொன்று விடுவோம் ஹமாஸ் அச்சுறுத்தல்!!