இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் தொடருக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்திய அணிக்கு பலவிதமான சிக்கல்கள் வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய சிக்கல் எழுந்துள்ளது.
இந்திய அணியின் முக்கிய இளம் வீரரான சுப்மன் கில் தற்போது ஆஸ்திரேலியா வில் செய்து வந்த பயிற்ச்சியில் காயம் காரணமாக மைதானத்தில் இருந்து வெளியேறியுள்ளார். இதனால் முதல் போட்டியில் இவர் விளையாடுவாரா மாட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே இந்திய அணியில் முதல் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விளையாட மாட்டார் என்பதால் பும்ரா தலைமையில் களமிறங்க உள்ளது.
ரோஹித் சர்மா இடத்தில் தொடக்க வீரராக களமிறக்க கே எல் ராகுலை திட்டமிட்டு வருகிறது அணி நிர்வாகம். மேலும் ஷமி தற்போது ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடி 7 விக்கெட்டுகள் எடுத்த நிலையில் அவர் அடுத்ததாக இரண்டாவது போட்டியில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணியில் 3 வதாக களமிறங்கும் கில் தற்போது காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாட மாட்டார் என கூறப்படும் நிலையில் அவருக்கு பதிலாக பெங்களூர் அணியில் விளையாடி படிக்கல் விளையாடுவார் என கூறப்பட்டு வருகிறது. மேலும் நிதிஷ் குமார் ரெட்டி ப்ளேயிங் லெவனில் களமிறங்குவார். இவர் ஒரு முதல் பாதியில் பந்து வீச வேண்டும் என்றும் கூறப்படுகிறது.