உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்பதில் சிக்கல்! இதற்காக நான் என்ன செய்ய முடியும்: -உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!!

Photo of author

By Parthipan K

உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்பதில் சிக்கல்! இதற்காக நான் என்ன செய்ய முடியும்: -உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!!

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைனில் கீவ் மற்றும் கார்கிவ் நகரங்களில் இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்கள் சிக்கித் தவித்து வருகிறார்கள். இதில் கீவ் நகரில் இருந்து அனைத்து இந்தியர்களும் அண்டை நாடு எல்லைக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்படுகிறார்கள்.

இதற்கிடையே, கார்கிவ் நகரில் இருந்து இந்தியர்களை வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கார்கிவ் நகரை பிடிக்க ரஷியா தாக்குதலை அதிகப்படுத்தியதால் இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்கள் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மத்திய அரசு உடனடியாக மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வர துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வற்புறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில்  உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையின்போது, உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி “சமூக வலைத்தளங்களில் நான் சில வீடியோக்கள் பார்த்தேன். அதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்ன செய்து கொண்டிருக்கிறார் என பதிவிடப்படுகிறது. இதற்காக, உக்ரைனுக்கு எதிராக ரஷியா நடத்தி வரும் போரை நிறுத்தும்படி நான் புதினுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியுமா?” என்றார்.

மேலும், உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களுக்காக நாங்கள் அனுதாபம் தெரிவிக்கிறோம் என்று கூறிய அவர் மத்திய அரசு மாணவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.