மத்திய மகளிர் மற்றும் சிறார் மேம்பாட்டு அமைச்சகம் தரப்பில் இந்தியா முழுவதும் மக்களுக்கு வழங்கப்படக்கூடிய சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை இனி உணவுப் பொருட்களில் பயன்படுத்தக் கூடாது என அதிரடியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதம் ஆனது மாநிலங்களுக்கு மட்டுமல்லாத யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மத்திய மகளிர் மற்றும் சிறார் மேம்பாட்டு அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :-
மத்திய அரசினுடைய மிஷின் போஷன் 2.0 திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய தாய்மார்கள் சிறார்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவருக்கும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை உணவு பொருளாகவோ அல்லது உணவுப் பொருளில் கலந்து வழங்கப்பட்டு வருவது தடை செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் மத்திய அரசினுடைய மிஷின் போஷன் 2.0 திட்டத்தின் கீழ் பாலூட்டக்கூடிய தாய்மார்கள் சிறார்கள் பெண்கள் என அனைவருக்கும் இனிப்பு உணவுகள் வழங்கும் பட்சத்தில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு பதிலாக வெள்ளத்தை பயன்படுத்தும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதிலும் அந்த உணவுப் பொருளில் 5% மட்டுமே வெள்ளத்தின் உடைய அளவு இருக்க வேண்டும் என்றும் அந்த அமைச்சகம் குறிப்பிட்டு இருக்கிறது.
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையால் செய்யப்பட்ட இனிப்புகளை குழந்தைகளின் பள்ளிகளில் வழங்கப்படக் கூடிய உணவுகளுடன் சேர்க்க வேண்டாம் என்றும் அதற்கு மாறாக மேலே கூறியபடி வெள்ளம் சேர்த்த இனிப்பு பலகாரங்களை கொடுக்கலாம் என்றும் தெரிவித்ததோடு சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை உடலுக்கு மிகவும் கேடு விளைவிப்பதால் அரசினுடைய திட்டங்களில் விளங்கப்படக்கூடிய சுத்தரிக்கப்பட்ட சர்க்கரை ஆனது வழங்குவதை தடை செய்ய வேண்டும் என இந்த அமைச்சகம் குறிப்பிட்டு இருக்கிறது.