பெண்களை கைது செய்ய கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்!! டிஜிபி சங்கர் ஜிவால் புதிய உத்தரவு!!

0
155
Procedures to be followed to arrest women!! New order by DGP Shankar Jiwal!!
Procedures to be followed to arrest women!! New order by DGP Shankar Jiwal!!

பெண்களை கைது செய்ய கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்!! டிஜிபி சங்கர் ஜிவால் புதிய உத்தரவு!!

பெண்களை கைது செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகளை காவல் துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் கூறி உள்ளார்.

அதாவது கைது செய்யப்படும் பெண்களை காவல் நிலையம் மற்றும் அவர்களின் வீடுகளில் மட்டுமே வைத்து விசாரணை செய்ய வேண்டும். மற்றபடி அவர்களை வேறு இடங்களுக்கு அழைத்து சென்று விசாரிக்க கூடாது.

பெண்களை சூரியன் வெளிவருவதற்கு முன்பாகவும், மாலை சூரியன் மறைந்த பிறகும் கைது செய்யக்கூடாது. இடைப்பட்ட நேரத்தில் மட்டுமே கைது செய்ய வேண்டும்.

மேலும், பெண்கள் மற்றும் சிறுமிகளை கைது செய்யும் சூழ்நிலை வந்தால் அவர்களை காவல் நிலையம் மற்றும் அவர்களின் வீடுகளுக்கு அழைத்து சென்று விசாரணையை மேற்கொள்ளலாம்.

இதற்கு முழுக்க முழுக்க பெண் காவல் துறையினர் பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும். அதேப்போல், கைது செய்யப்படும் பெண்களை பரிசோதனை செய்ய பெண் மருத்துவர்களை மட்டுமே காவல் துறையினர் அனுமதிக்க வேண்டும்.

மேலும், கைது செய்யப்படும் பெண் கற்பமாக இருக்கும் பட்சத்தில் அவரின் கைது நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். எதற்காக இந்த கைது என்கிற விவரத்தை சாம்மந்தப்பட்ட பெண்ணிடம் கட்டாயமாக கூறி இருக்க வேண்டும்.

மேலும், காவல் நிலையங்களில் பெண்களை வெகு நேரத்திற்கு தங்க வைத்திருக்க கூடாது. இதுபோன்ற வழிமுறைகளை கண்டிப்பாக அனைத்து காவல் அதிகாரிகளும் கடைபிடிக்க வேண்டும் என்று டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Previous articleமின்கம்பத்தில் மோதி சாலையில் கவிழ்ந்த ஆம்னி பஸ்!! திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்த விபரீதம்!! 
Next articleகோத்தகரியில் ஏற்பட்ட மண்சரிவு… உயிருடன் இரண்டு நபர்கள் பத்தியமாக மீட்பு!!