தவெக மாநாட்டில் தொலைந்த மகன்!! 14 நாட்களாகியும் கிடைக்காமல் தேடும் குடும்பம்!!

Photo of author

By Gayathri

கடந்த மாதம் அக்டோபர் 27ஆம் தேதி அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள விசாலையில் நடைபெற்ற முடிந்தது.

இந்த மாநாட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் இருந்தும் மாவட்டங்களில் இருந்தும் ரசிகர்கள், தொண்டர்கள் என பல லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கரையான்காடு பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி புஷ்பநாதன் ( 64) இவரது மனைவி 20ஆண்டுகள் முன்பு உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார். இவர்களுக்கு மகன் மேகநாதன் (32) மற்றும் ஒரு மகள் உள்ளனர் மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் அப்பா மகன் இருவரும் கரையங்காடு பகுதியில் வசித்து வருகின்றனர்.

மகன் மேகநாதன் டிவி மெக்கானிக்காக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் விஜய் உடைய தீவிர ரசிகர் என்பதால் அவருடைய மாநாட்டிற்கு அவருடைய ஊரிலிருந்து மொத்தம் 34 பேர் சென்றுள்ளனர். மாநாடு முடிந்து 33 பேர் மட்டும் திரும்பி வந்த நிலையில் மேக நாதனை காணவில்லை என்ற பதற்றம் அதிகரித்துள்ளது.

அவரது தொலைபேசி எண்ணிற்கு அழைத்தபோது அந்த எண் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. உடனே குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அவர்கள் விக்கிரவாண்டிகள் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி தெரிவித்திருக்கின்றனர். அக்டோபர் 30-ஆம் தேதி அன்று விக்கிரவாண்டில் உள்ள காவல் நிலையத்தில் மேகநாதனின் பெற்றோர் புகார் அளித்த நிலையில், மேகநாதன் காணாமல் போய் இன்றுடன் 14 நாட்கள் ஆன நிலையில் அவரை இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் கவலையில் அவருடைய குடும்பத்தினர் வாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.