பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியர்கள் இனி கலாஷேத்ராவில் பணியமர்த்தப்பட மாட்டார்கள் என்கிற உறுதியை எழுத்துப்பூர்வமாக அளிக்க நிர்வாகத்திடம் மாணவிகள் விடுத்த கோரிக்கையை ஏற்க கலாஷேத்திரா நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கலாஷேத் ராவில் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள பேராசியர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாகவும், இனி அவர்கள் கலாஷேத் ராவில் பணியமர்தப்பட மாட்டார்கள் என்கிற உத்தரவாதத்தை எழுத்துபூர்வமாக மாணவிகள் கேட்டுள்ளனர். ஆனால், கலாஷேத் ரா நிர்வாகம் எழுத்துபூர்வமாக அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
மாணவிகளால் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள பேராசியர்கள் சஞ்சித் லால், ஸ்ரீநாத், சாய் கிருஷ்ணா உட்பட நால்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசியர் ஹரிபத்மன் மட்டும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், மத்திய கலாச்சார அமைச்சகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இன்று மாணவிகள் தரப்பிலும், பெற்றோர் தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தினர் . இதில் குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியர்களை பணி இடைநீக்கம் செய்ய நிர்வாகம் ஒத்துக் கொண்டுள்ளது. எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாகவும், இவர்கள் இனி கலாஷேத்ராவில் பணியமர்த்தப்படமாட்டார்கள் என்கிற உத்தரவாதத்தை எழுத்துப்பூர்வமாக மாணவிகள் கேட்ட நிலையில், அதற்கு நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும் வரும் புதன்கிழமை முதல் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற உள்ளதால், அன்றைய தினம் கல்லூரியை திறப்பது குறித்து கல்லூரி நிர்வாகம் மாணவிகளிடம் தெரிவித்துள்ளது. ஆனால் ஆலோசனைக்குப் பிறகே அது குறித்து தெரிவிக்க முடியும் என மாணவிகள் தரப்பு தெரிவித்துள்ளது.