இந்த இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை! போலீசார் எச்சரிக்கை!

Photo of author

By Parthipan K

இந்த இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை! போலீசார் எச்சரிக்கை!

டெல்லி மெட்ரோ ரயில் கழகம் டி எம் ஆர் சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில். சுதந்திர தினத்தை ஒட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மார்க், எஸ்.பி லோடிங் ரோடு ,எஸ் பி முகர்ஜி ரோடு ,சாந்தினி நிஷாத் ராஜ் மார்க்,ரிங் ரோடு , தெரிவித்துள்ளனர். மேலும் மெட்ரோ ரயில் நிலையங்களில் நாளை காலை 6 மணி முதல் திங்கள் கிழமை பிற்பகல் 2 மணி வரை வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதனையடுத்து நொய்டா ,லோனி, சிங்கு, கஜப்பூர், பதர்பூர், சக்தியா மகராஜ்பூர், ஆயாநகர், சூர்யா நகர், ராஜாரி டான்ஸ், போபுரா, லால் டவுன், புல் பிராத் பூர் ,திக்ரி எல்லைகள் வாகன போக்குவரத்துக்கும் வணிக போக்குவரத்துக்கும் இன்று காலை 10 மணி முதல் திங்கட்கிழமை முற்பகல் 11 மணி வரையிலும் தடை விதிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் எதுவும் இல்லாத நிலையில் ரயில் நிலையங்களில் மட்டும் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.