ஒலிம்பிக் போட்டி நடத்துவதில் தடையா! அதிர்ச்சியில் விளையாட்டு வீரர்கள்!
ஒலிம்பிக் போட்டியானது ஜப்பானில் உள்ள டோக்கியோவில் நடக்க உள்ளது.நம் தமிழகத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.தற்பொழுது இந்த போட்டியானது நடக்குமா என்றும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.ஏனென்றால் வீரர்கள் தங்கும் ஹோட்டலில் உள்ள ஊழியர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா தொற்று உறுதி அடைந்த 8 ஊழியர்களும் விளையாட்டு வீரர்களுக்கு எந்த சேவையும் செய்யக்கூடாது என்று ஜப்பான் விளையாட்டு துறை கூறியுள்ளது.ஒலிம்பிக் போட்டிகள் பெரும்பான்மையாக மூடிய கதவுகளுக்குப் பின்னால் போட்டி நடத்துவதற்கு தயாராகி வருகிறது.
விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் என அனைவருக்கும் கடுமையான பாதுகாப்புகளுக்குப் பின்னரே விளையாட்டு நடப்பதற்கு அனுமதிக்கப்படும்.அதேபோல முழு உடல் பரிசோதனை சான்று உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார் என்று நகர விளையாட்டு அதிகாரி யோஷினா பாபு சவாடா கூறியுள்ளார்.மேலும் கொரோனா தொற்று பாதிக்கப்படாத ஆரோக்கியமான ஊழியர்கள் மட்டுமே தற்பொழுது பணியில் இருப்பதாக கூறியுள்ளனர்.மேலும் குழுவில் பாதிக்கப்பட்ட 8 ஊழியர்களில் ஒரு குடும்பத்தில் உள்ளவர்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது என ஹமாமாட்சு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தற்போது டோக்கியோ நகரத்தில் அதிக அளவு தொற்று பரவிவருகிறது.கடந்த புதன்கிழமை மட்டும் 1549 தொற்று பதிவாகியுள்ளது.இது ஜனவரி மாதத்திலிருந்ததை விட மிக உயர்ந்ததாக கூறுகின்றனர். அடுத்ததாக ரஷ்ய ரக்பி செவன்ஸ் அணியை கொரோனா பரிசோதனை செய்வார்.இந்த அணியில் 16 விளையாட்டு வீரர்கள் மற்றும் 10 ஊழியர்கள் உள்ளனர்.இவர்கள் ஜூலை 10 அன்று டோக்யோ விமான நிலையத்தை வந்தடைந்தனர்.இவர்கள் வந்த நாளிலிருந்தே உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அங்குள்ள குடியிருப்பு அவர்களுடன் கொரோனா தொற்றின் அபயாத்தால் நெருங்கிய தொடர்பு கொள்ளவில்லை.இதர அணிகள் இப்பொழுது தங்கிய இடத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் வரும் வியாழக்கிழமை அவர்கள் பரிசோதனை முடிவுகள் வருமாயின் வெள்ளிக் கிழமையிலிருந்து அவரது பயிற்சிகள் ஆரம்பமாகும் என தெரிவித்தனர்.