விருதுநகர் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசார் 3381 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அழிப்பு!

Photo of author

By Savitha

விருதுநகர் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசார் 3381 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அழிப்பு!

விருதுநகர் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசாரால் கைப்பற்றப்பட்ட சுமார் 4 லட்சத்தி 70 ஆயிரம் மதிப்பிலான 3381 மது பாட்டில்கள் அழிக்கப்பட்டன.

விருதுநகர் மாவட்டத்தில் அரசு விடுமுறை நாட்களில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யும் நபர்களை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவது வழக்கம் ஆகும்.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சாத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவினரால் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் சட்ட விரோதமாக விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த 3381 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்

இந்த நிலையில் சட்டவிரோதமாக விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் மீது நீதிமன்றம் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட சுமார் 3381 மது பாட்டில்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன

இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் படி சுமார் 4 லட்சத்தி 70ஆயிரம் மதிப்பிலான 3381 மதுபான பாட்டில்களை மது விலக்கு போலீசார் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் குழி தோண்டி தரையில் ஊற்றி அழித்தனர்.