ரயிலில் இந்த பொருட்களை கொண்டு செல்ல தடை! மீறினால் மூன்று ஆண்டு ஜெயில்!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்த நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.நடப்பாண்டில் கொரோனா பரவல் குறைந்துள்ளது அதனால் பண்டிகை நாட்களில் மக்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் தீபாவளி பண்டிக்கைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பேருந்து ,ரயில் மற்றும் விமானங்கள் என அனைத்திலும் கூட்டம் அலைமோதுகின்றது.அதனால் ஆம்னி பேருந்துக்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.விடுமுறை நாட்கள் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயணம் செய்கின்றனர்.அதனால் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்கள் என அனைத்து பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் ரயில்களில் பயணம் செய்பவர்கள் அவர்களது உடமைகளுடன் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களான பெட்ரோல் ,டீசல் ,மண்ணெண்ணெய் ,கேஸ் சிலிண்டர் ,தீப்பெட்டி ,சிகரெட்டுகள் மற்றும் தீபவாளி பட்டாசுகள் போன்ற பொருட்களை எடுத்துவர கூடாது.இந்த உத்தரவை மீறி தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு வரும் பயணிகளுக்கு மூன்று ஆண்டு ஜெயில் தன்டனை அல்லது ரூ 1,000 அபராதமாக விதிக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.