அனிகாவிற்க்கு வந்த பிரோபோஸ்!! காதலை ஏற்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன்!!

Photo of author

By CineDesk

அனிகாவிற்க்கு வந்த பிரோபோஸ்!! காதலை ஏற்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன்!!

CineDesk

Propos that came to Anika !! I will commit suicide if I do not accept love !!

அனிகாவிற்க்கு வந்த பிரோபோஸ்!! காதலை ஏற்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன்!!

கௌத்தம் மேனன் இயக்கத்தில் தல அஜித்குமார் நடித்த என்னை அறிந்தால் படத்தில் திரிஷா மற்றும் ஆகித்தின் மகளாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அனிகா சுரேந்திரன். அவர்  தமிழ் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்றார். இதனால் அவருக்கு தமிழ் சினிமாவில் நிறைய வாய்ப்புகள் அமைந்தது. பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் குமார் நடித்த விஸ்வாசம் படத்தில் மீண்டும் அவருக்கும் நயன்தாராவுக்கும் மகளாக நடித்தார் அனிகா. படப்பிடிப்பின்  போது தல அஜித்தை அப்பா என்று தான் அழைப்பேன் என்று பேட்டி ஒன்றில் கூறினார்.

அனிகாவை அஜித் குமாரின் மகளாகவே அவரின் ரசிகர்கள் பார்க்கிறார்கள். அதனால் தல பொண்ணு என்று அவரை செல்லமாக அழைக்கிறார்கள். அனிகா தற்போது  நிறைய  போட்டோஷூட் நடத்தி அந்த  புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அவர் தற்போது கதாநாயகியாக நடிக்க தயாராகி விட்டார்.  அனிகா சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேட்கும்  அனைத்து கேள்விகளுக்கும் மறுக்காமல் பதில் அளிப்பார். இந்நிலையில் அவர் லைவில் வரும் போது ரசிகர்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும்  பொறுமையாக பதில் அளித்தார். அப்பொழுது ஒரு ரசிகர் அவரிடம்,  நான்  உங்களின் தீவிர ரசிகர் என்றும்  அவர் அனிகாவை காதலிப்பதாகவும் சொல்லி, அதை அனிகா ஏற்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் கூறினால் என்ன செய்வீர்கள் என்று அனிகாவிடம் கேட்டார்.

அதற்கு அனிகா கூறியதாவது, அது எனக்கு நடந்திருக்கிறது. இமெயில் மூலம் அப்படி ஒரு ப்ரொபோஸல் வந்தது. அதை பார்த்து எனக்கு பயமாக இருந்தது. ஆனால் என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே விட்டுவிட்டேன் என்றார். மற்றொரு ரசிகர் அவரின் உயரத்தை பற்றி கூறுகையில், அனிகா சுமாரான உயரம் தான் என்றார். அதற்கு அனிகா பதிலளித்ததாவது, நான் உயரம் இல்லை என்பதை ஏற்றுக் கொள்வதை தவிர வேறு வழியில்லை. என் உயரம் 5.2 அடி. அது குறித்து முதலில் வருத்தமாக இருந்தது. ஆனால் குள்ளமாக இருப்பதால் பல நன்மைகளும் இருக்கிறது என்றார்.