அதிமுக தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய முன்னாள் அமைச்சர்!

0
63

என்னை கட்சியில் இருந்து நீக்கியது எடப்பாடி பழனிச்சாமியையும் கட்சியிலிருந்து நீக்குவார்களா என கேட்டு அதிரடி காட்டியிருக்கின்றார் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில்.

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கே.சி வீரமணி அவர்களுக்கும், நிலோபர் கபில் அவர்களுக்கும் இடையேயான மோதல் போக்கு நீடித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதன் உச்சத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அவர்களுக்கு மறுபடியும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என நிலோபர்கபில் அவர்களின் அதரவாளர்கள் தெரிவித்து வந்தார்கள்.இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி நிலோபர் கபில் கட்சியில் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்தது.

இந்த நிலையில், நிருபர்களிடம் தனிச் செயலாளராக பணியாற்றி வந்த பிரகாசம் சென்னை டிஜிபி அலுவலகத்தில் ஒரு புகார் தெரிவித்தார். அந்த புகாரின் பேரில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிமுக தலைமை தெரிவித்திருக்கிறது. அரசு வேலையை வாங்கிக் கொடுப்பதாக 106 பேரிடம் 6 கோடி ரூபாய் மோசடி செய்திருக்கிறார் நிலோபர் கபில். அந்த புகாரின் பேரில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அதிமுக தலைமை தெரிவித்திருக்கிறது.

இதுதொடர்பாக இது நேற்று இரவு பத்திரிக்கையாளர்களும் அவர் உரையாற்றிய போது நான் அமைச்சராக இருந்த வரையில் எனக்கும் கட்சியில் மரியாதை இல்லை, என்னுடைய தொகுதியிலும் கட்சியினர் மரியாதை தருவதில்லை. இதன் காரணமாக, கட்சியில் இருந்து விலகி கொள்கிறேன் என்று தலைமைக்கு கடிதம் எழுதி இருந்தேன். கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் என்னுடைய வெற்றிக்கு பிரகாஷ் பக்கபலமாக இருந்து வந்தார். ஆனால் அவரை அரசியல் உதவியாளரை வைத்துக் கொண்டேன் என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனாலும் அரசு வேலை வாங்கித் தருவதாக தெரிவித்து அவர் பணம் வாங்கியது எல்லாம் எனக்கு தெரியாது. அவர் பணப்பரிமாற்றம் செய்தது எதுவுமே எனக்கு தெரியாது. என் மீது பொய்யான குற்றச்சாட்டை தெரிவிக்கிறார்கள் .ஆறு கோடி ரூபாய்க்கு என் பெயரை எடுத்துக் கொள்வேனா இருந்தாலும் என் மீதான புகாரை நான் சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

ஐம்பதாயிரம் ஒரு லட்சம் வாங்கும் நிலையிலா நான் இருக்கின்றேன் பிரகாஷ் தெரிவிக்கும்போது தான் இத்தனை கோடி பணம் கொடுத்து ஏமாந்து இருக்கிறார்கள் என்ற விஷயமே எனக்கு தெரிய வந்தது. ஆனால் ஏப்ரல் மாதத்திலேயே ஜெயசுதா என்பவர் புகார் தெரிவித்த உடனேயே அது தொடர்பாக மோசடி எனக்கு தெரிய வந்தவுடன் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பிரகாஷ் மீது புகார் கொடுத்து இருக்கின்றேன் என்று தெரிவித்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில்.

வேலை வாங்கி தருவதாக யாரிடமாவது பணம் வாங்கியிருந்தால் அதற்கு பிரகாஷ் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்த அவர், நான் யாரிடமும் இதுவரையில் பணம் வாங்கியது கிடையாது. வேண்டுமென்றால் என் வங்கி கணக்குகளை தணிக்கை செய்துகொள்ளலாம் என தெரிவித்திருக்கிறார் நிலோபர் கபில்.

ஊழல் புகாரின் பெயரில் தான் என்னை கட்சியிலிருந்து நீக்கியதாக தெரிவிக்கிறார்கள் திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது அவர்களையும் கட்சியை விட்டு நீக்கி விடுவார்களா? முன்னாள் முதலமைச்சர் மீது இந்நாள் முதலமைச்சர் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார். அதற்காக அவர் கட்சியை விட்டு விலகி விடுவாரா இல்லை இவர்கள் தான் நீக்கி விடுவார்களா என்று கேட்டு பரபரப்பை உண்டாக்கி இருக்கிறார் முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில்.