தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மை தீமைகள்!! தயிரை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும் தெரியுமா?

Photo of author

By Divya

தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மை தீமைகள்!! தயிரை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும் தெரியுமா?

Divya

நம் இந்தியாவில் மக்கள் அதிகம் விரும்பி உண்ணும் உணவுப் பொருளாக இருப்பது தயிர் தான்.பாலில் இருந்து தயாரிக்கப்படும் இந்த தயிர் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தவையாக உள்ளது.வீட்டு விஷே உணவுப் பட்டியலில் தயிர் முக்கிய இடத்தை பிடிக்கிறது.

தயிரில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

1)கால்சியம்
2)வைட்டமின் பி,வைட்டமின் பி 12
3)பொட்டாசியம்
4)மெக்னீசியம்
5)புரதம்

தயிரில் அடங்கியுள்ள நன்மைகள்:

**தயிரில் உள்ள புரோபயாடிக் செரிமானப் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.இதில் அதிகளவு நன்மை தரும் பாக்டீரியாக்கள் நிறைந்து காணப்படுகிறது.இதன் காரணமாக அஜீர்ணக் கோளாறு எளிதில் சரியாகிவிடும்.

**உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தயிர் சாப்பிடலாம்.தயிரில் நிறைந்துள்ள வைட்டமின்,புரோட்டின் போன்றவை உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.

**சருமம் சார்ந்த பிரச்சனைகளை சரி செய்ய தயிர் சாப்பிடலாம்.தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் சரும பிரச்சனைகளை போக்க உதவுகிறது.

**தயிர் சாப்பிடுவதால் உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை சரியாகும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

**உடல் சூடு தணிய,குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தயிர் உட்கொள்ளலாம்.தயிரில் உள்ள கால்சியம் சத்து எலும்பு தேய்மானத்தை தடுக்கிறது.அல்சர்,வாய்ப்புண் பிரச்சனை இருப்பவர்கள் தயிரை உட்கொண்டு பலனடையலாம்.

**மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க தயிர் உட்கொள்ளலாம்.வாயில் கொப்பளம் இருந்தால் அதை குணப்படுத்த தயிர் உட்கொள்ளலாம்.

தயிரில் அடங்கியுள்ள தீமைகள்:

**மூட்டு வலி பிரச்சனை இருப்பவர்கள் தயிர் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.இரவு நேரத்தில் தயிர் சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.

**ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்கள் தயிர் உட்கொண்டால் அது பாதிப்பை இன்னும் அதிகரித்துவிடும்.

**கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் தயிர் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.தயிருக்கு பதில் மோர் உட்கொள்ளலாம்.

**வாயுத் தொல்லை,மலச்சிக்கல்,வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனையை அனுபவித்து வருபவர்கள் தயிர் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

**சளி,மூக்கடைப்பு,இருமல் பிரச்சனை இருப்பவர்கள் இரவு நேரத்தில் தயிர் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

**உடல் மந்தப் பிரச்சனை இருப்பவர்கள் தயிர் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.கீல்வாத பிரச்சனை இருப்பவர்கள் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.மூச்சுக்குழாய் அலர்ஜி இருப்பவர்கள் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.