உடலுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துக்களில் ஒன்று புரதம்.இதை நாம் உணவின் மூலம் மட்டுமே பெற முடியும்.தினசரி நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் புரோட்டின் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.தினசரி பயறு வகைகள்,காய்கறிகளை கொண்டு சால்ட் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் புரதச்சத்து அதிகரிக்கும்.
உயர்தர புரதம் நிறைந்த ஹெல்தி சாலட் செய்முறை:
தேவையான பொருட்கள்:-
1)பச்சை பயறு
2)கருப்பு சுண்டல்
3)தயிர்
4)கொத்தமல்லி தழை
5)வெள்ளை சுண்டல்
6)கேரட்
7)வெள்ளரி
8)உப்பு
9)மிளகுத் தூள்
10)தக்காளி
11)வெங்காயம்
12)சீரகத் தூள்
13)வேர்க்கடலை
செய்முறை விளக்கம்:-
முதலில் பச்சை பயறு,கருப்பு சுண்டல்,வெள்ளை சுண்டல்,வேர்க்கடலை ஆகியவற்றை தண்ணீரில் போட்டு ஐந்து மணி நேரம் வரை ஊறவைக்க வேண்டும்.அதன் பிறகு இந்த பொருட்களை வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கேரட்டை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும்.பின்னர் தக்காளி,வெங்காயம்,வெள்ளரி ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்பு கிண்ணம் ஒன்றை எடுத்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம்,தக்காளி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.பின்னர் வெள்ளரிக்காய்,கேரட் ஆகியவற்றை போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.அதன் பின்னர் ஊறவைத்த பயறு வகைகளை அதில் போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.
பின்னர் இரண்டு தேக்கரண்டி தயிர்,கால் தேக்கரண்டி சீரகத் தூள்,கால் தேக்கரண்டி மிளகுத் தூள்,நறுக்கிய கொத்தமல்லி தழை மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான புரதம் கிடைக்கும்.