உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்து புரதம்.இதை புரோட்டீன் என்றும் அழைக்கின்றோம்.உடலில் புரோட்டீன் சத்து இருந்தால் மட்டுமே தசைகள் வலிமை அதிகரிக்கும்.நாம் உண்ணும் உணவில் சரியான அளவு புரதம் இருந்தால் மட்டுமே எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.
உடல் எலும்பின் அடர்த்தியை தக்க வைத்துக் கொள்ள புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க புரதச்சத்து அவசியமான ஒன்றாக உள்ளது.உடலில் வளர்ச்சிதை மாற்றம் அதிகரிக்க தேவையான அளவு புரதம் இருக்க வேண்டும்.நாம் புரதத்தை உட்கொண்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரையும்.இதய ஆரோக்கியத்திற்கு புரதச்சத்து அவசியமானவை ஆகும்.உடல் தசை மற்றும் உறுப்புகளின் வலிமையை அதிகரிக்க புரதச்சத்து நிறைந்த உணவுகளை அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
புரதம் என்றால் நமக்கு நினைவிற்கு வருவது முட்டை தான்.முட்டையில் புரதத்தை தவிர்த்து வைட்டமின்கள்,தாதுக்கள்,போலிக் அமிலம் உள்ளிட்டவை நிறைந்துள்ளது.அதேபோல் கால்சியம்,பாஸ்பரஸ்,வைட்டமின் டி உள்ளிட்ட சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கிறது.முட்டையில் இத்தனை நன்மைகள் நிறைந்திருந்தாலும் சைவப் பிரியர்களால் இதை உட்கொள்ள முடியாது.ஆகவே முட்டைக்கு இணைய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ள காய்கறிகளை தேர்வு செய்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
முட்டைக்கு இணையான புரதச்சத்து கொண்ட காய்கறிகள்:
1)முருங்கை இலை மற்றும் காய்
இதில் புரதம்,இரும்பு,கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிரம்பி காணப்படுகிறது.இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை அதிகரிக்கும்.செரிமானப் பிரச்சனை சரியாகும்.உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
2)பசலைக் கீரை
இந்த கீரையில் புரதச்சத்து நிறைந்து காணப்படுகிறது.இது தவிர கால்சியம்,இரும்பு,வைட்டமின் கே,வைட்டமின் சி,வைட்டமின் ஏ உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்திருக்கிறது.எலும்பு வலிமை பெற,நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பசலைக் கீரையை அடிக்கடி சாப்பிடலாம்.புரதச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த கீரை வர பிரசாதம் என்றே சொல்லலாம்.
3)காளான்
அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று காளான்.இதில் பட்டன் காளான்,சிப்பி காளான் என்று பல வகைகள் இருக்கிறது.காளானில் புரதம்,வைட்டமின் பி,செலினியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
காளானை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.மூளை ஆரோக்கியம் மேம்பட காளான் உட்கொள்ளலாம்.
4)பச்சை பட்டாணி
இதில் நார்ச்சத்து,வைட்டமின்கள்,புரதம் அதிகம் உள்ளது.செரிமானப் பிரச்சனை,இதய நோய்,இரத்த சர்க்கரை நோய் பாதிப்பை கட்டுப்படுத்துகிறது.நாம் எடுத்துக் கொள்ளும் 100 கிராம் பட்டாணியில் 5 கிராம் புரதம் நிறைந்து காணப்படுகிறது.
5)ப்ரோக்கோலி
இதில் பொட்டாசியம்,போலேட் உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.100 கிராம் ப்ரோக்கோலியில் கிட்டத்தட்ட 3 கிராம் புரதம் நிறைந்திருக்கிறது.