Star 2.0 என்ற மென்பொருளை அப்டேட் செய்த பத்திர பதிவுத்துறை இனி சொத்துக்களை வாங்க நினைப்பவர்களே அதற்கான கிரைய பத்திரங்களை தயாரிக்கும் வகையில் மென்பொருட்களை வெளியிட்டு இருக்கிறது. இனி கிரைய பத்திரங்களுக்காக சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சென்று காத்திருக்க வேண்டிய நிலை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
புதிதாக சொத்துக்களை வாங்கக் கூடியவர்கள் தங்களுடைய தரவுகளை கொடுத்து லாகின் செய்து கிரைய பத்திரத்தின் வரைவை மாதிரிகளின் வரைபடங்களை வைத்து தங்களுடைய கிரைய பத்திரங்களை தயார் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
முக்கியமாக என்ன அடிப்படையில் பத்திரத்தை பெற நினைக்கிறோமோ அதன் வகையை தேர்வு செய்து அதன் பின் சொத்துக்களை விற்கக்கூடியவரின் விவரங்கள் மற்றும் வாங்க கூடியவரின் விபரங்களை வெளியீடு செய்து கிரைய பத்திரங்களை தயார் செய்து கொள்ளலாம் என்றும் இவற்றில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சென்று உங்களுடைய சந்தேகங்களை எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் கிரைய பத்திரங்களை பெறுவதற்கான டோக்கன் மற்றும் பணம் செலுத்தும் வழிமுறைகள் அனைத்தையும் பொதுமக்களே மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இனி புதிதாக சொத்துக்களை வாங்கும் பொழுது கிரைய பத்திரங்களை தயார் செய்வதற்காக நிறைய காலங்கள் எடுத்துக் கொள்வது மற்றும் அடிக்கடி சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஏறி இறங்குவது போன்ற சிரமங்களை தவிர்க்க முடியும் என்றும் தங்களுக்கு தேவையான பத்திரங்களை தாங்களே தயாரித்துக் கொள்ளும் வகையில் அதற்கான அனைத்து மென்பொருள்களும் கிரைய பத்திரங்களின் மாதிரிகளும் பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பதாக பதிவு துறை தரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.