மயிலாடும்பாறை – மல்லபுரம் மலைச்சாலையில் தடுப்புசுவர் கட்ட பொதுமக்கள் கோரிக்கை!
தேனி – மதுரை இரண்டு மாவட்டங்களை இணைக்கும் சாலை மயிலாடும்பாறை மல்லபுரம் மலைச்சாலை ஆகும், இந்த சாலையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருவது வழக்கம், இப்பகுதியில் தினந்தோறும் கல்லூரி மாணவர்கள் பள்ளி மாணவர்கள் மல்லப்புரம் பகுதிகளுக்கு வாகனங்களில் சென்று வருகிறார்கள். மேலும் வாகனங்கள் செல்லுகின்ற பொழுது இடதுபுறம், வலதுபுறம் ,மலைகளின் சாலையில் ஆங்காங்கே சருக்கு ஏற்படுகிறது, இதனால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
சிலவேளைகளில் வாகனங்கள் தடுமாறி மலைகளில் விபத்து ஏற்பட்டிருக்கிறது, இது சம்பந்தமாக வருசநாடு பகுதி பொதுமக்கள் வனத்துறை சார்பாக மலப்புரம் சாலையை சீரமைக்க கோரி நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள் ஆனால் இருவரையும் சாலைகளை கண்டுகொள்ளாமல் வனத்துறை இருக்கின்றன. மேலும் மயிலாடும்பாறை பகுதிகளில் விளைகின்ற விவசாய விலை பொருட்களான தக்காளி ,அவரை, பீன்ஸ் ,கொத்தவரை, பூசணி தேங்காய் ,போன்ற காய்கறி பயிர்களை உசிலம்பட்டி, பேரையூர், சிவகங்கை, திருநெல்வேலி ,போன்ற பகுதிகளுக்கு மலப்புரம் மலைச் சாலை வழியாக கொண்டு செல்கிறார்கள்.
இதனால் சாலைகள் மிகவும் குண்டும் குழியுமாக இருப்பதினால் விவசாய பொருட்களை குறிப்பிட்ட நேரத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் ஒவ்வொரு நாளும் விவசாயிகள் சிரமப்பட்டு வருகிறார்கள். சிலவேளைகளில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி அடுத்த நாள் செல்லும் நிலை ஏற்படுகிறது. இது சம்பந்தமாக தேனி மாவட்ட ஆட்சியரும் மதுரை மாவட்ட ஆட்சியரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இதுகுறித்து வருசநாடு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில் எங்கள் வருசநாடு பகுதியில் இருந்து ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பேரையூர், மலப்புரம், பகுதிகளுக்கு செல்வது இயல்பாக இருக்கிறது.மேலும் சாலைகள் மிகவும் மோசமாக இருக்கிறது ஆங்காங்கே தடுப்புச்சுவர் கட்டாமல் இருப்பதினால் விபத்துக்குள்ளாக பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே இது சம்பந்தமாக தமிழக முதலமைச்சரும் தேனி மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அவ்வாறு செய்தால் மட்டுமே எங்கள் பகுதி வாகனங்களையும் பொது மக்களையும் பாதுகாக்க முடியும் என்றார்.