10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை: – பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வெளியீடு!

0
149

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை: – பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வெளியீடு!

தமிழகத்தில், ஒமைக்ரான் வைரஸ் மற்றும் கொரோனா தொற்று பரவலின் காரணமாக, மூன்றாவது அலை உருவானது. இதனால் ஜனவரி மாதம் இறுதி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த தடை விதித்து விடுமுறை அளிக்கப்பட்டது. எனினும், ஆன்லைன் வாயிலாக பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் தொற்றின் பரவல் குறைந்து கொண்டு வந்தது. இதன் காரணமாக, தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதனிடையே, 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் நடைபெற இருந்த திருப்புதல் தேர்வு, கொரோனா பரவல் காரணமாக, பிப்ரவரி மாதம் நடத்தி முடிக்கப்பட்டது. அப்போது தேர்வுக்கு முன்பே, வினாத்தாள்கள் வெளியான விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக தேர்வு எழுதாமலேயே மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு வந்தனர். ஆனால் இந்தமுறை பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு கண்டிப்பாக பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.

இதற்காக பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் பாடங்களை விரைந்து முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதற்கிடையே, தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து உள்ளார்.

Previous articleஎன் கதையில நான் வில்லன்டா… இருப்பினும் அதிலும் நான் நல்லவன்டா…
Next articleதமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மழை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!!