நோய்த்தொற்று பரவல்! புதிய தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு!

0
124

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலை பல இடங்களில் குறைந்திருந்தாலும், தற்சமயம் வரையில் நோய்த்தொற்று பரவல் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை என்றுதான் சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே தமிழக அரசு பொது மக்களுக்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி இருக்கிறது.

இதற்கிடையில் தமிழ் நாட்டில் அமலில் இருக்கின்ற ஊரடங்கு வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் அனைத்தும் மற்றும் கேளிக்கை விடுதிகள் நீச்சல் குளங்கள், பொதுமக்கள் பங்கேற்று கொள்ளும் சமுதாய மற்றும் அரசியல் சார்ந்த கூட்டங்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உயிரியல் பூங்காக்கள், உள்ளிட்டவற்றை திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்படுகிறது. இறுதிச் சடங்குகளில் 20 நபர்கள் மட்டுமே பங்கேற்கலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், நோய் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் தமிழ் நாடு முழுவதும் பொது நூலகங்களை இன்று முதல் திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதோடு வழிகாட்டு நெறி முறைகளையும் பின்பற்ற அறிவுறுத்தி இருக்கிறது.

Previous articleஇன்று வெளுத்து வாங்கப்போகும் மழை! சென்னை ஆய்வு மிக முக்கிய தகவல்!
Next articleதொடர்ந்து ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை! பெரு மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!