கடலூரில் சாலையை சீர்படுத்த கோரி உயர் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் வேண்டுகோள்??
கடலூர் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அதிகம் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக கடலூர் சிப்காட் பகுதியில் அதிக தொழிற்சாலைகள் அமைந்துள்ளது. இங்க பல்வேறு ஐஸ் கட்டி தொழிற்சாலைகளும் கடலூர் சிப்காட் வளாகத்தில் கெமிக்கல்ஸ் தொழிற்சாலைகளும் உள்ளது.
இதைத்தொடர்ந்து அங்கு மாத்திரை தயாரிக்கும் தொழிற்சாலைகள்,பெயிண்ட் தொழிற்சாலைகள், அலுமினிய பாத்திரம் தயாரிக்கும் தொழிற்சாலை, உள்ளிட்ட பலவிதமான தொழிற்சாலைகள் இயங்குகின்றது.இந்நிலையில் கடலூர் மற்றும் கடலூரை சுற்றி பலவிதமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
மேலும் இங்கு பல்வேறு ஹோட்டல்கள் சுற்றுலா தளத்திற்கு வரும் பணிகளுக்கும் ஏற்றவாறு காணப்படும் ஊராக திகழ்கிறது. இப்படி முக்கியமானதாக இருந்தாலும் அனைவரும் போக்குவரத்திற்கு பயன்படுத்தக்கூடிய சாலைகள் கடலூரில் மிக மோசமானதாகவும் உள்ளது. இந்த சாலையில் பல்வேறு தொழிற்சாலை உள்ளடக்கிய துறைமுகத்திலும் சாலை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் மற்றும் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.இந்த மோசமான நிலையிலுள்ள சாலையால் பல்வேறு விபத்துகளும் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் சாலையில் நடந்து செல்லும் பெரியவர்கள் வரை அதிகமாக பாதிப்புக்குள்ளாகின்றனர்.
இந்நிலையில் மோசமான சாலையை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினர் . எனவே உரிய அதிகாரிகள் இதில் தலையிட்டு சாலையை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் ஏற்படும் விபத்துக்கள் அதிக அளவில் குறைய வாய்ப்புள்ளது.