தமிழகத்தில் இருக்கக்கூடிய 34 ஆயிரத்து 793 ரேஷன் கடைகளை நேரில் சென்று ஆய்வு செய்யும்படி உணவுத்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த ஆய்வின் போது துவரம் பருப்பில் கலப்படம் இருப்பதை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் கண்டுபிடித்தவர் அடுத்து அங்கு வேலை பார்க்கக்கூடிய இரண்டு அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படக்கூடிய துவரம் பருப்பில் கலப்படம் உள்ளதா என்பதை சோதனை செய்யுமாறு தமிழக அரசிடம் இருந்து உத்தரவு வந்திருக்கிறது.
ஏழை எளிய மற்றும் வறுமை கோட்டின் கீழ் இருக்கக்கூடிய குடும்பங்களுக்கான ரேஷன் அட்டைகளில் மானிய விலையில் சர்க்கரை பாமாயில் துவரம் பருப்பு அரிசி கோதுமை மாவு என வழங்கப்பட்டு வரும் நிலையில் இவற்றில் கலப்படம் உள்ளது என்பது மக்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இந்த துவரம் பருப்பு அரிசி போன்றவை கொள்முதல் செய்யப்பட்டு அரசு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்ட பின் அங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் அருணாச்சலா எஸ் கே எஸ் இண்டஸ்ட்ரீஸ் பெஸ்ட் போன்ற தனியா நிறுவனங்களிடமிருந்து இது போன்ற பருப்பு கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகவும் அங்கிருந்துதான் ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் வேடந்தூரில் இருக்கக்கூடிய ரேஷன் பொருட்கள் கிடங்கில் ஆர்வம் மேற்கொண்ட பொழுது துவரம் பருப்பு கலப்படம் செய்யப்பட்டு இருப்பதை கண்டு பணியிலிருந்து இருவரை உடனடியாகவே சஸ்பெண்ட் செய்துள்ளார்.இது மிகப்பெரிய பேச்சுப் பொருளானது அடுத்து தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய ரேஷன் கடைகள் மற்றும் ரேஷன் பொருட்கள் வைத்திருக்கக் கூடிய குடும்பங்களின் தரத்தை ஆய்வு செய்யும் படி உணவுத்துறைக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது.