புதுவையில் பாஜக போடும் புது திட்டம்!

0
362

புதுவையில் பாஜக தன்னுடைய தலைமையில் ஆட்சி அமைப்பதற்கு தீவிர முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக பாஜகவின் கூட்டணிக் கட்சிகளே குற்றம்சாட்டி வருகின்றன.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் ஆட்சியை அமைத்து முதலமைச்சராக நாராயணசாமி நியமனம் செய்யப்பட்ட போது முக்கிய துறையை கவனித்து வந்த அமைச்சர் நமச்சிவாயதுடன் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்கள் தொடர்பில் இருந்தார்கள். இந்த நிலையில் ஒரு கட்டத்தில் அமைச்சர் பதவியையும், சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் நமச்சிவாயம்.

இவ்வாறான சூழ்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற புதுச்சேரி சட்டசபை தேர்தலில் களமிறங்கும் அதற்கு பாஜக கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் தயாராக இருந்து களம் கண்டது. என் ஆர் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாரதிய ஜனதா கட்சி ஒன்பது இடங்களில் அதிமுக ஐந்து இடங்களில் போட்டியிட்ட அதிமுக 5 தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது. என் ஆர் காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் வெற்றி அடைந்தது அதேபோல பாரதிய ஜனதா கட்சியை 6 தொகுதிகளில்வெற்றி பெற்றது.

இப்படியான சூழலில், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் பரிந்துரையில் அவசர அவசரமாக மாதம் பத்தாம் தேதி பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வெங்கடேசன், ராமலிங்கம். அசோக் பாபு, ஆகிய மூவரையும் நியமன சட்டசபை உறுப்பினராக நியமனம் செய்து ஆணை அனுப்பியது மத்திய உள்துறை அமைச்சகம். அதனை துணைநிலை ஆளுநரும் ஏற்றுக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது.

நிலைமை இப்படி இருக்கையில் தேர்தலில் வெற்றி அடைந்த நமச்சிவாயம், ஜான்குமார், கல்யாணசுந்தரம், ஏம்பலம் செல்வம் சாய் சரவணன் 6 சட்ட சபை உறுப்பினர்களுடன் சுயேச்சை சட்ட சபை உறுப்பினர்களான யேனம் தொகுதி அசோக், திருபுவனை தொகுதி அங்காளன், உழவர்கரை தொகுதி சட்டசபை உறுப்பினர் சிவசங்கரன், ஆகிய 3 பேரும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து விட்ட காரணத்தால், பாரதிய ஜனதா கட்சியின் பலம் புதுச்சேரி சட்டசபையில் 9 ஆக உயர்ந்த சூழ்நிலையில், நியமன சட்டசபை உறுப்பினர்கள் மூன்று பேர் தற்சமயம் பாஜக எம்எல்ஏக்கள் பன்னிரெண்டை நெருங்கியிருக்கிறது.

உருளையான் பேட்டை தொகுதி சுயேட்சை சட்டசபை உறுப்பினர் நேரு, முத்தையால்பேட்டை சட்டசபை உறுப்பினர் ஆகிய 3 பேரும் பாரதிய ஜனதா கட்சியுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பதாக அந்த கட்சி வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.நடைபெற்று முடிந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றி அடைந்த சட்டசபை உறுப்பினர்கள் யாரும் இதுவரையில் பதவி ஏற்றுக் கொள்ளவில்லை. சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் என யாரும் நியமனம் செய்யப்படாத நிலையில், ரங்கசாமி அவசரம் அவசரமாக கடந்த 7ஆம் தேதி முதல் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

இந்த நிலையில்தான் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க வேக வேகமாக செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. புதுச்சேரி அரசியல் தட்பவெப்ப சூழ்நிலை அறிந்து கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் புதுவையில் கொல்லைப்புற வழியாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடிப்பதற்கு முயற்சி செய்கிறது எனவும், அவசரமாக நியமனம் செய்த நியமன சட்ட சபை உறுப்பினர்களை வாபஸ் பெற வேண்டும் எனவும், தன்னுடைய கண்டனத்தையும் பதிவு செய்தார்.

பாரதிய ஜனதா கட்சி மீது இருக்கின்ற குற்றச்சாட்டுகளை அந்த கட்சியின் முக்கியப் பிரமுகர் ஒருவரிடம் விசாரணை செய்து சமயத்தில் சுயேட்சை சட்டசபை உறுப்பினர்கள் கட்சிக்கு வருகை தருகிறார்கள். வருபவர்களை நாங்கள் வரவேற்கிறோம் தேர்தலில் அவர்கள் அதிக அளவில் செலவு செய்து இருக்கிறார்கள் அவர்களுக்கு கட்சி உதவி செய்கிறது அவ்வளவுதான் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

ஆனால் கூட்டணி ஆட்சிதான் தொடரும் முதலமைச்சர் ரங்கசாமி தான். துணை முதலமைச்சர் பாஜகவை சார்பாக தான் இருப்பார் அதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது பாரதிய ஜனதா கட்சி சட்டசபை உறுப்பினர்கள் பலத்தை அதிகரிப்பதற்கு காரணம் ராஜ்யசபா உறுப்பினர் பதவியை கைப்பற்ற தான் என்ன சொல்கிறார்கள்.

Previous articleதேர்தலில் தோல்வியடைந்தாலும் சாதித்து காட்டிய சி.வி.சண்முகம்! கொண்டாடும் கூட்டணி கட்சியினர்
Next articleகுழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த தயாராகும் இந்தியா! மத்திய அரசு புதிய அனுமதி!